பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியன் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது!

CHENNAI:

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில் சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியன் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது!

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் பான் இந்தியன் திட்டமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. இதில் முன்னணி நடிகர்களின் முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் ஒரு முக்கியமான மற்றும் நீண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையில் நடந்த முதல் படப்பிடிப்பில் படக்குழுவுடன் இணைந்தவர், தற்போது இரண்டாவது ஷெட்யூலிலும் இணைந்துள்ளார். தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ள படங்களில் ராம், சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் மற்றும் CEO விசு ரெட்டி ஆகியோரின் மகிழ்ச்சியான முகங்களைக் காணலாம்.

ராம் மற்றும் பூரி ஜெகன்நாத் இருவரும் முன்பு பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தைக் கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக ‘டபுள் ஐஸ்மார்ட்’ படம் பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. பூரி ஜெகன்நாத்தின் பிரம்மாண்டமான கதையில் ராம் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்தப் படத்தில் உள்ளார்.

ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் கியானி கியானெல்லி இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படத்தில் பணியாற்றுகிறார். ‘டபுள் ஐஸ்மார்ட்’ தொழில்நுட்ப ரீதியாக உயர் தரத்துடன் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள்.

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மகா சிவராத்திரியான மார்ச் 8, 2024 அன்று வெளியிடப்படும்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்நாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகநாத், சார்மி கவுர்
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
CEO: விசு ரெட்டி,
ஒளிப்பதிவு: கியானி கியானெல்லி,
ஸ்டண்ட் இயக்குநர்: கெச்சா,

 

 

 

Double iSmart Second Schedule Begins In Thailand NEWSFeatured
Comments (0)
Add Comment