‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், மம்முட்டி நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை:

ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமாக ‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ சக்ரவர்த்தி ராமச்சந்திரா-வால் தொடங்கப்பட்டது. மம்முட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் எழுதி-இயக்கும் மலையாளத் திரைப்படமான ‘பிரமயுகம்’, நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் பேனரின் முதல் தயாரிப்பாகும்.

படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் கூறும்போது,

“மம்மூக்காவை இயக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறி உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பிரமயுகம்’ கேரளாவின் இருண்ட காலத்தை மையமாகக் கொண்ட கதை. மேலும், இதை ஒரு சிறந்த திரைப்பட அனுபவமாக மாற்றுவதற்காக தயாரிப்பாளர்களின் ஆதரவைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகம் முழுவதும் உள்ள மம்மூக்காவின் ரசிகர்களுக்கும் திரில்லர் வகை திரைப்பட ரசிகர்களுக்கும் இது ஒரு விருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன்”.

தயாரிப்பாளர்கள் சக்ரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ்.சஷிகாந்த் – “எங்கள் அறிமுகத் தயாரிப்பில் லெஜெண்ட் நடிகர் மம்மூக்கா நடிப்பதில் நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். மம்மூக்காவின் இணையற்ற நடிப்பு இந்தப் படத்தை ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக கொடுக்கப் போகிறது என்பது உறுதி. ‘பிரமயுகம்’ படத்தில் இதற சில திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து எங்கள் இயக்குநர் ராகுல் ஒரு ஆத்மார்த்தமான படைப்பை தரவிருக்கிறார்”.

‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு கொச்சி மற்றும் ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்ய, ஜோதிஷ் சங்கர் கலை வடிவமைப்பாளராகவும், ஷஃபீக் முகமது அலி எடிட்டராகவும், கிறிஸ்டோ சேவியர் இசையமைப்பாளராகவும் உள்ளார். TD ராமகிருஷ்ணன்  வசனம் எழுத, மேக்கப் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் காஸ்ட்யூம்ஸ் – மெல்வி ஜே வடிவமைக்கின்றனர்.

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பிரமயுகம்’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

 

 

FeaturedNight Shift Studios & YNOT Studios Present #Bramayugam NEWS
Comments (0)
Add Comment