“விருஷபா” திரைப்படத்திற்காக இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சியை கடந்த ஒரு மாத காலத்தில் படமாக்கி முடித்துள்ள படக்குழு!

CHENNAI:

நந்த கிஷோரின் “விருஷபா – தி வாரியர்ஸ் ரைஸ்” திரைப்படம் இந்தியாவில் உள்ள மைசூரில் முதல் ஒரு மாத கால ஷூட்டிங்கை முடித்துள்ளது. 22 ஜூலை 2023 அன்று தொடங்கிய படப்பிடிப்பில் மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கலந்துகொள்ள பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

விருஷபா திரைப்படம் மிகப்பெரிய ஆக்சன் படமாக இருக்குமென்பதை தயாரிப்பாளர்கள்,  ஒவ்வொருமுறையும் உறுதி செய்து வருகின்றனர்.
நிர்வாக தயாரிப்பாளராக ஹாலிவுட்டைச் சேர்ந்த  நிக் துர்லோவை இணைத்த பிறகு, தயாரிப்பாளர்கள் மிகவும் பிரபலமான அதிரடி சண்டைப்பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்னை ஆக்சன்  காட்சிகளை வடிவமைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். பீட்டர் ஹெய்னின் ஆக்சன் வடிவமைப்பில் பாகுபலி, புலிமுருகன், சிவாஜி: தி பாஸ், கஜினி, எந்திரன் (ரோபோ), புஷ்பா: தி ரைஸ் – பாகம் 1 போன்ற பிரமாண்ட வெற்றிப்படங்கள் ஆக்சன் காட்சிகளுக்காக கொண்டாடப்பட்டது குறிப்பிடதக்கது.

இயக்குநர் நந்த கிஷோர் கூறுகையில்

“ சமீபத்தில் மைசூரில் முடிந்த முதல் ஷெட்யூலில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் பரபரப்பான படப்பிடிப்பு திட்டமிடலில் தினசரி இலக்குகளை அடைய இரவும் பகலும் கடுமையாக உழைத்த எனது ஒட்டுமொத்த தயாரிப்புக் குழுவிற்கும் நன்றி தெரித்துக் கொள்கிறேன். எனது முன்னணி நடிகர்களான மோகன்லால் சார், ரோஷன் மற்றும் ஷனாயா, ஸ்ரீகாந்த் மற்றும் ராகினி  அவர்கள் பரபரப்பான படப்பிடிப்பில் கொஞ்சமும் அயராது, இரவு பகலாக உழைத்துள்ளனர். புலிமுருகன் படத்திற்குப் பிறகு மோகன்லால் சார் மற்றும் பீட்டர் ஹெய்ன் இருவரும் இணைந்து, இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆக்‌ஷன் சீக்வென்ஸை விருஷபா முடித்திருப்பது இதன் ஹைலைட் ஆகும்.”

ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதியுடன் மெகாஸ்டார் மோகன்லால் & ரோஷன் மேகா, ஷனாயா கபூர் மற்றும் சஹ்ரா S கான் ஆகியோர்  நடிக்கும் “இந்தியாவின் மிகப்பிரமாண்டமான  ஆக்சன் மற்றும் VFX  காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான டிராமாவாக இருக்கும்,  2024 இன் மிகப்பெரிய படங்களில் இப்படம் ஒன்றாக இருக்கும். விருஷபா திரைப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. (ஏவிஎஸ் நிறுவனத்துக்காக) நந்த கிஷோர் இயக்கும் இந்தப் படத்தை அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா மற்றும் ஷ்யாம் சுந்தர் (ஃபர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ்)  (கனெக்ட் மீடியா) வருண் மாத்தூர் மற்றும் சவுரப் மிஸ்ரா தயாரித்துள்ளனர்.. தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

FeaturedVrushabha concludes its month long first shooting schedule with filming one of Indian Cinema's biggest Action sequences NEWS
Comments (0)
Add Comment