ஜே எஸ் ஜே சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் “ஸ்ட்ரைக்கர்”. இப்படத்தில் ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், நடன இயக்குனர் ராபர்ட், கஸ்தூரி ஷங்கர், அபிநயா மற்றும் பலர் நடித்துள்ளனர் இப்படத்திற்கு கதை எழுதி இயக்கி இருக்கிறார் எஸ் ஏ பிரபு.
இப்படத்தின் கதைப் பொறுத்தவரையில்,
பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் மெக்கானிக் வேலை பார்க்கிறார் ஜஸ்டின் விஜய். அந்த சமயத்தில் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஆர்வம் கொண்ட நோக்கத்தில் அதற்கான படிப்பில் அவர் சேருகிறார். அந்த சமயத்தில் அவரை பேட்டி எடுக்க youtube நிருபர் வித்யா வருகிறார். அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி படித்து தெரிந்து கொண்ட ஜஸ்டின் விஜய் பேய்களுடன் பேசுவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் பேயை விரட்ட அந்த அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ஜஸ்டின் விஜய்யிடம் சொல்கிறார்.
அந்தப் பேயை விரட்டுவதற்காக தன்னுடைய தோழி வித்யா பிரதிப்புடன் அங்கு செல்கிறார். அங்கு விபத்து ஏற்பட்டு ஒருவர் பேயாக நடமாடுவதை ஜஸ்டின் விஜய் கண்டுபிடிக்கிறார். அந்தப் பேயை அழைத்துப் பேச ஓஜா போர்ட் வைத்து, அதன் உதவியுடன் இருவரும் பேச முயல்கின்றனர். அப்போது அந்த பேய் அங்கு வருகிறது. அந்த சமயத்தில் திடீரென்று வித்யா பிரதீப் உடலுக்குள் சென்ற அந்தப் பேய் ஜஸ்டின் விஜய்யை பழிவாங்க துடிக்கிறது. இருவரையும் கொல்ல நினைத்த அந்தப் பேயிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் “ஸ்ட்ரைக்கர்” படத்தின் மீதிக் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கஸ்தூரி அமானுஷ்ய பாடம் நடத்தும் ஆசிரியையாக இப்படத்தில் நடித்திருக் கிறார். பேய் மற்றும் ஆன்மா பற்றி அவர் தரும் விளக்கங்கள் ஆர்வத்தை தூண்டுகிறது. அதன் பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் நம்புகின்ற மாதிரி இல்லை. இப்படிக்கூட நடக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு கிளைமாக்சை முடிப்பது அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சிக்காக பல காட்சிகளை பொறுமையாக சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் பேய்களுடன் பேசும் ஓர் அம்சத்தை மட்டுமே பிரதானப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளதால் நமக்குசலிப்பை ஏற்படுத்துகிறது.
கதாநாயகன் ஜஸ்டின் விஜய் நடிப்பில் இன்னும் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்தி மெருகூட்டி நடித்திருக்கலாம். தன் முகபாவனைகளை மாற்றி நடிக்க முயற்சி செய்து இருந்தாலும், அதில் தோல்வியடைந்து இருக்கிறார்.வித்யா பிரதீப் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்து சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ராஜேந்தர் என்ற பேயாக வரும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் யாருக்கும் பயம் வரவில்லை.
விஜய் சித்தார்த் இசை பெரிதாக ஒன்றும் சொல்கின்ற மாதிரி இல்லை. மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவில் இருட்டான காட்சிகளை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
இயக்குனர் எஸ். ஏ.பிரபு இடைவேளைவரை விளக்கம் சொல்லியே காட்சிகளை நகர்த்துவதால் நமக்கு சலிப்பு ஏற்படுகிறது. இறுதிக் கட்ட காட்சியில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் இப்படி கூட நடக்குமா என்ற கேள்வியை கேட்க வைக்கிறது.
மொத்தத்தில் “ஸ்ட்ரைக்கர்” படத்தை பார்க்கலாம்.
ரேட்டிங்-2/5.
RADHAPANDIAN.