இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்‘ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்‘ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன் பேசியதாவது…
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நடிகர் கார்த்தி பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், பாரதிராஜா ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா சாரை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போது வரை அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்தப்படம் கண்டிப்பாக நல்லபடியாக வரும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…
மனோஜ் கட்டாயம் இயக்குநராக ஆவார் என்று நம்பினேன், அது தற்போது உண்மையாகி உள்ளது. சுசீந்திரன் மூலம் இது நடந்துள்ளது. பாரதிராஜா அவர்கள் இயக்குநராக இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். மனோஜின் திறமை மீது எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், சிவகுமார் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் வணக்கம். இசை என்றால் இளையராஜா தான், இயக்குநர் என்றால் பாரதிராஜா தான் என்று மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இளையராஜா மற்றும் பாரதிராஜா மீண்டும் இணைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. டிரைலரில் பாரதிராஜா, கதாநாயகன் மற்றும் கதாநாயகி மிகவும் நன்றாக நடித்துள்ளனர். மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.
இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது…
மனோஜ் இயக்குநராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பல வருடங்களாக அவரிடம் இதை நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒரு அற்புதமான இயக்குநராக உருவாக்குவதற்கு மனோஜ் பாரதிராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த திரு சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை நினைத்துக்கொண்டேன். இதன் பாடல்கள் மிக அழகாக ‘காதல் ஓவியம்’ பாடல்களை நினைவூட்டின. இசைஞானி இளையராஜா மற்றும் பாரதிராஜா அவர்களை பிரிக்க முடியாது, அவர்கள் உறவு என்றும் மறையாது. மனோஜ் பாரதிராஜா அவர்கள் புதிய அத்தியாயத்தை இப்படத்தின் மூலம் தொடங்குவார். கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு வாழ்த்துகள். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்.
கதாநாயகி நக்ஷா சரண் பேசியதாவது…
‘மார்கழி திங்கள்’ குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா சார் அவர்கள் மிகவும் நட்பாக பேசுவார்கள். எனக்கு வாய்ப்பளித்த மனோஜ் பாரதிராஜா மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி. படம் மிகவும் நன்றாக வந்துள்ளது.
கதாநாயகி ரக்ஷனா பேசியதாவது…
மனோஜ் பாரதிராஜா சார், சுசீந்திரன் சார் மற்றும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் அனைத்து குழுவினருக்கும் நன்றி. இளையராஜா சார் கையை வச்சா அது ராங்கா போனதில்ல. இந்த திரைப்படத்திற்கு அவர் இசை அமைத்துள்ளார், ரொம்ப நன்றி சார். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், கண்டிப்பாக அனைவரும் பார்க்கணும்.
கதாநாயகன் ஷியாம் செல்வன் பேசியதாவது…
மனோஜ் பாரதிராஜா அவர்களால் தான் நான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா மற்றும் இளையராஜா சார் அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது…
தமிழ் சினிமாவில் இயக்குநர் என்றால் பாரதிராஜா சார் தான். திருப்பாவையில் வரும் முதல் வார்த்தை மார்கழி திங்கள். எனவே இது மிகவும் அருமையான தலைப்பு. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். டிரைலர் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன்.
இயக்குநர் மனோஜ் பாரதிராஜா பேசியதாவது…
18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குநராக வந்திருக்கிறேன். சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதைய சொல்லியிருந்தேன். திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு ‘நீங்க படம் பண்ணுங்க’ என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை. கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்ஷனா மற்றும் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவரும் பாருங்கள். என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் என்றால் ஒரு குடும்பம் என்று சொல்லலாம். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.
பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி பேசியதாவது…
மனோஜ் பாரதிராஜாவிற்கு வாய்ப்பளித்த சுசீந்திரனுக்கு நன்றி. பாரதிராஜாவிற்கு நன்றி. திறமையானவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து கிடைத்துள்ளது. ‘மார்கழி திங்கள்’ என்று அழகான தமிழ் டைட்டில். இதைப் பார்க்கும்போதே மனதுக்குள் சந்தோஷம். மண் வாசனை நிறைந்த படமாக இருக்கும் என்றும், பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் நம்புகிறேன். திரைப்படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். மனோஜ் பாரதிராஜாவை பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய இயக்குநராக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தந்தையை மிஞ்சிய தனையனாக வருவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது.
அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கமும். என்னுடைய தம்பி இயக்குநராக ஆகியிருப்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. மிகப்பெரிய சாதனை படைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரது திறமைக்கு எதுவும் ஈடாகாது. உலகத்தின் தலைசிறந்த ஓவியராக வரவேண்டியவர் பாரதிராஜா.
நடிகர் சிவகுமார் பேசியதாவது…
திரையுலகத்தை சேர்ந்த அனைவரையும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தில் ரொம்ப வருடங்களுக்கு பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். இத்திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதாவது…
என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை ஜாம்பவான்களுக்கும் நன்றி. நடிகனாக இருந்து இயக்குநராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது நம்பிக்கை உள்ளது. டிரைலர் தான் காட்டியிருக்கிறான், மிக அற்புதமாக செய்துள்ளான். முக்கியமாக நான் நன்றி தெரிவிக்க வேண்டியவர் யார் என்றால் சுசீந்திரன் தான். காதலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அத்தனை இயக்குநர்களும் என்னை அப்பா என்று தான் அழைத்தார்கள். மிகவும் மகழிச்சி. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன்.
’Margazhi Thingal’ trailer and audio launch event highlights
Actor Manoj Bharathiraja is making his debut as a director through ‘Margazhi Thingal’ bankrolled by Director Suseenthiran’s Vennila Productions. While ‘Iyakkunar Imayam’ Bharathiraja plays a very important role, the film has newcomers Shyam Selvan, Rakshana, and Naksha Saran in lead characters.
Bharathiraja and music maestro Isaignani Ilaiyaraaja have teamed up after 31 years for this film. The trailer and audio launch event of ‘Margazhi Thingal’ was held in Chennai on Wednesday. Here are the highlights:
Suseenthiran, who delivered the welcome address, said…
I am very happy to produce this film that has brought together Iyakkunar Imayam Bharathiraja and Manoj Bharathiraja.
Actor Karthi said…
Greetings to all. My salutations to Bharathiraja sir. I didn’t think Manoj Bharathiraja would direct a movie so soon. Thanks to Suseenthiran for making this happen. I feel very happy whenever I think of Ilaiyaraaja sir. Till now I have been following him as a role model. I wish he continues to compose music for more films. I pray to God that this film should definitely do well.
Producer G. Dhananjayan said…
Good evening, all. The title ‘Margazhi Thingal’ is wonderful. I hope the film will have a lot of substance. We expect the movie to be like ‘Alaigal Oivadhillai’. I have to thank Suseenthiran sir. He has given opportunity to new faces. Best wishes for the movie’s success.
Director Thiru said…
Congratulations to Manoj and Suseenthiran. I wish this movie all success.
Producer Suresh Kamatchi said…
I hoped that Manoj should become a director and it has now come true. This is because of Suseenthiran. A great filmmaker, Bharathiraja is now focusing on acting. I have a lot of faith in Manoj’s talent. I wish this film success.
Producer P.L. Thenappan said…
Thanks to all the good souls who have come here. We all are here for Bharathiraja. Suseenthiran sir has produced his first film. I wish Manoj to direct many movies and be successful.
Director Perarasu said…
Greetings to Bharathiraja, Sivakumar, Seeman and all others. Music means Ilaiyaraaja and direction means Bharathiraja. They have carved a place for themselves in the hearts of the people. I am very happy to see the reunion of the two greats. Bharathiraja, the hero and the heroine have acted very well in the trailer. ‘Margazhi Thingal’ directed by Manoj Bharathiraja will become a huge hit.
Directors Association Secretary R.V. Udhayakumar said…
I wanted Manoj to become a director. I kept telling him this for years. Thanks to Suseenthiran for giving Manoj Bharathiraja an opportunity to become a wonderful director. When I saw the trailer of this movie, I thought of ‘Alaigal Oivadhillai’. Its songs very beautifully reminded me of the songs of ‘Kadhal Oviyam’. Ilaiyaraaja and Bharathiraja cannot be separated and their relationship will never fade. Manoj Bharathiraja will start a new chapter with this film. Congratulations to the hero and heroine. I wish this movie will be a hit.
Heroine Naksha Saran said…
Thank you to the entire team of ‘Margazhi Thingal’. Bharathiraja sir is very friendly. Many thanks to Manoj Bharathiraja and Suseenthiran for giving me the opportunity. The film has turned out very well.
Heroine Rakshana said…
Thank you Manoj Bharathiraja sir, Suseenthiran sir and all the crew members of ‘Margazhi Thingal’. Ilaiyaraaja, whose music can never go wrong, has composed for this movie, thank you very much sir. You (audience) will love this movie and everyone must watch it.
Protagonist Shyam Selvan said…
I have acted in this movie because of Manoj Bharathiraja. Thanks to everyone who helped in this film. Thank you Bharathiraja and Ilaiyaraaja sir. Gratitude to everyone who came to the event. Thanks to everyone in my family.
Director Lingusamy said…
Bharathiraja sir is one of the finest directors in Tamil cinema. Margazhi Thingal is the first word in Thiruppavai. So this is a really a nice title. Kudos to the producer of this movie, Suseenthiran. The trailer looks great. I hope this movie will be a huge hit.
Director Manoj Bharathiraja said…
After 18 years of struggle I am now a director. I had narrated many stories to Suseenthiran sir. Suddenly one day he called me and said ‘You should make a film’. After that the shooting started in 15 days. I am honoured to have Ilaiyaraaja and Bharathiraja teaming up in my first film. The protagonist Shyam has acted well. Rakshana and all have contributed wonderfully. This movie has taken shape well. Everyone should watch it. Thanks to my wife and children who have been with me in my troubles. Journalists are like a family. I hope this movie will be a success.
FEFSI Chairman and Director R.K. Selvamani said…
A deserving talent like Manoj Bharathiraja has been given a deserving opportunity by Suseenthiran. Thanks to Bharathiraja sir too. The beautiful Tamil title ‘Margazhi Thingal’ makes me happy. I hope the film will be earthy and grand. All the actors in the movie have acted well. Journalists should take Manoj Bharathiraja to the people as a great director.
Naam Tamilar Party chief coordinator Seeman said…
My love and respect to all. It is a happy moment to have my younger brother as the director. Thank you, Suseenthiran. Ilaiyaraaja is a greatest achiever. Nothing beats his talent. Bharathiraja sir is another great legend.
Actor Sivakumar said…
It’s great to see everyone from the film industry here. Iyakkunar Imayam Bharathiraja and Isaignani Ilaiyaraaja have teamed up after many years in ‘Maragazi Thingal’. I hope this movie will be very good. I wish everyone a long and happy life.
Iyakkunar Imayam Bharathiraja said…
“En iniya Tamizh Makkale, ungal paasathirkuriya Bharathiraja pesugiren.” Thanks to all the greats who are sitting on the stage. It’s not easy for an actor to become a director, I have faith in my son. The trailer has been done brilliantly. The main person I have to thank is Suseenthiran. Everyone should watch this love-based movie. All the directors here fondly called me father. I cherish this love. Thanks to all who came here. I am sure this film will be successful, I will talk about my son at that time.