திரையுலகின் திறமைமிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமா யுனிவர்ஸில் முதல் திரைப்படமாக உருவாகும் திரைப்படம் ஹனு மான். இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் இப்படம் தற்போது படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தில் சில உயர்தர VFX காட்சிகள் உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க வேண்டுமென படம்குழு தீவிர கவனம் எடுத்து உழைத்து வருகிறது. டீஸர் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தரவேண்டுமென்பதில் படக்குழுவினர் தெளிவாக உள்ளனர்.
இதற்கிடையில் ஹனு மான் தயாரிப்பு தரப்பிலிருந்து ரசிகர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பண்டிகை கொண்டாட்டமாக ஒரு கச்சிதமான போஸ்டரை வெளியிட்டு, படத்திற்கான விளம்பரங்களைத் தொடங்கியுள்ளனர். இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு மாறுபட்ட பாரம்பரிய அவதாரத்தில் தோன்றுகிறார், மேலும் அவர் விநாயக சதுர்த்தி விழாவை,
ஒரு பெரிய கூட்டத்துடன் கொண்டாடுகிறார். தயாரிப்பாளர்கள் விரைவில் சில அற்புதமான அப்டேட்டுகளுடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.
தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனு மான் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது.
‘ஹனு மான்’ கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால், உலகம் முழுவதும் சிறப்பாக வரவேற்கப்படும் சாத்தியம் உள்ளது. இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் K நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
இந்த பிரம்மாண்டமான படைப்பின், ஒளிப்பதிவை சிவேந்திரா செய்கிறார், இதில் இளம் திறமையாளர்களான கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர். ஸ்ரீநாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் ஜனவரி 12, 2024 அன்று சங்கராந்திக்கு திரைக்கு வரவுள்ளது.
நடிகர்கள்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: பிரசாந்த் வர்மா
தயாரிப்பாளர்: K நிரஞ்சன் ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்
வழங்குபவர்: ஸ்ரீமதி சைதன்யா
திரைக்கதை: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே Scriptsville
ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரா
இசையமைப்பாளர்கள்: அனுதீப் தேவ், ஹரி
கவுரா, ஜெய் கிரிஷ் மற்றும் கிருஷ்ணா சௌரப் எடிட்டர்: எஸ்.பி.ராஜு தலாரி
நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்ரின் ரெட்டி வரி
தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
லைன் புரடியூசர்: குஷால் ரெட்டி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீநாகேந்திர தங்காலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஆடை வடிவமைப்பாளர்: லங்கா சந்தோஷி
Team Hanu-Man Wishes Everyone A Happy Ganesh Chaturthi, Kickstarts Promotions With A Brand-new Poster
Creative Director Prasanth Varma’s first film from his Cinematic Universe HANU-MAN starring talented hero Teja Sajja is progressing with its post-production formalities. Given the movie will have some high-end VFX, the team is taking extreme care to offer the best cinematic experience to the audience across the globe. They became more cautious with the teaser receiving a thumping response in all languages.
Meanwhile, team Hanu-Man wished everyone a happy Ganesh Chaturthi. They kick-started the promotions by releasing a perfect poster that is full of festive vibes. Teja Sajja appears in a traditional avatar and he is seen celebrating Ganesh Chaturthi festival with a huge crowd around him. The makers will come up with some exciting updates soon.
HANU-MAN will have a Pan World release in several Indian languages including Telugu, Hindi, Marathi, Tamil, Kannada, Malayalam, English, Spanish, Korean, Chinese and Japanese.
HANU-MAN is essentially set-up in an imaginary place called “Anjanadri”. Since the concept of the film is universal, it has the potential to do well across the globe.
Amritha Aiyer is the leading lady opposite Teja Sajja in the movie, where Vinay Rai will be seen as the antagonist and Varalaxmi Sarathkumar in a key role.
K Niranjan Reddy of PrimeShow Entertainment is producing the movie prestigiously, while Smt Chaitanya presents it. Asrin Reddy is the executive producer, Venkat Kumar Jetty is the Line Producer and Kushal Reddy is the associate producer. The cinematography for this magnum opus is by Shivendra, wherein the music is scored by the young and talented trio Gowrahari, Anudeep Dev and Krishna Saurabh. Srinagendhra Tangala is the production designer.
This most-awaited film will be hitting the screens for Sankranthi on January 12, 2024.
Cast: Teja Sajja, Amritha Aiyer, Varalaxmi Sarathkumar, Vinay Rai, Getup Srinu, Satya, Raj Deepak Shetty and others
Technical Crew:
Writer & Director: Prasanth Varma
Producer: K Niranjan Reddy
Banner: Primeshow Entertainment
Presents: Smt Chaitanya
Screenplay: Scriptsville
DOP: Dasaradhi Shivendra
Music Directors: Gowrahari, Anudeep Dev and Krishna Saurabh
Editor: SB Raju Talari
Executive Producer: Asrin Reddy
Line Producer: Venkat Kumar Jetty
Associate Producer: Kushal Reddy
Production Designer: Srinagendhra Tangala
PRO: Yuvraaj