“ஐமா” திரைப்பட விமர்சனம்!

சென்னை:

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு,  மனோகரன், வில்லனாக  தயாரிப்பாளர் சண்முகம்  ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.  இசை: கே ஆர்.ராகுல். ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன். எடிட்டிங் அருண் ராகவ், இயக்கம்: ராகுல் ஆர்.கிருஷ்ணா.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கும்  எல்வின் ஜூலியட்டிற்க்கு ஒரே உறவான தனது அண்ணன் இறப்பால் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.  தற்கொலை முயற்சியில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் எல்வின் ஜூலியட்டை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அதே சமயத்தில் கதாநாயகன் யூனஸ் தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை அதே மருத்துவமனையில்  சேர்க்கிறான். ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத கதாநாயகன் யூனஸ்ஸும், சிகிச்சையிலிருந்து மீண்ட எல்வின் ஜூலியட்டும் திடீரென்று கடத்தப்பட்டு ஒரு மர்மமான  இடத்தில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அந்த இடத்தில் பேய் குரல் ஒலிக்கின்ற மாதிரி ஒரு குரல், “உங்கள் உடலில் விஷம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பிட்ட நேரத்திற்குள் தப்பிக்கவில்லை என்றால், இறந்துவிடுவீர்கள்” என்று சொல்கிறது.

இதனால் கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு,  அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர்.  அவர்கள் அங்கிருந்து தப்பிக்கும்போது, “இங்கு இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்றில், இருவரது உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் மருந்து இருக்கிறது, மற்றொரு வழியில் மருந்து மற்றும் மர்மம் இருப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறது. தங்கள் இருவரையும் கடத்திய இந்த மர்ம மனிதனின் பின்னணியை தெரிந்துக் கொள்ள, இருவரும், அதற்கான வழியை தேடி செல்கிறார்கள். கடைசியில் அந்த அந்த மர்ம மனிதனை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை சொல்வதுதான் ‘ஐமா’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் யூனஸ், பார்ப்பதற்கு நடிகர் விஜய் போலவே இருப்பது மட்டும் அல்ல அவருடைய ஒவ்வொரு அசைவும், விஜய்யை நினைவூட்டுகிறது. விஜய் பாணியை, தனது நடிப்பில் இருந்து அகற்றிவிட்டு, தனக்கான பாணியில் நடிக்க முயற்சித்தால் அவரது எதிர்கால திரைப்பட பயணம் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

கதாநாயகி எவ்லின் ஜூலியட்  குறை சொல்ல முடியாத அளவிற்கு தன் நடிப்பில் கதாபாத்திரத்தின்  உணர்வுகளை தெளிவாக புரிந்துக் கொண்டு அளவாக நடித்து அசத்தியிருக்கிறார். அந்த மர்ம மாளிகையிலிருந்து தப்பிக்கும் காட்சிகளில் நல்ல முக பாவங்களைக் காட்டியுள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி புதுமுக நடிகர்போல் இல்லாமல் காட்சிகளின் தன்மையை உணர்ந்து மிக தெளிவாக நடித்திருக்கிறார்.  அவரது அபாரமான நடிப்பு மற்றும் ஆக்ரோசமான கண்கள் மூலமாக பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

திரில்லர் படம் என்ற சமிக்ஞை படத்தின் தொடக்கத்திலேயே தெரிகிறது. பேய் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்து மெல்ல, மெல்ல சைன்ஸ் பிக்ஷனாக மாறுகிறது.இரத்தத்தை கதைக்கருவாக வைத்துக்கொண்டு மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா, முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக்கொண்டு மிக சுவாரஸ்யமான படத்தை இயக்கியிருக்கிறார். ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றிருந்தாலும்.  பல காட்சிகளில்  இன்னும்  கொஞ்சம்  விறுவிறுப்புபை  சேர்த்திருக்கலாம்.

கே ஆர்.ராகுல் இசையில் படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் சின்ன, சின்னதாக இசை அமைத்து இருந்தாலும். கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் திரையில் பாடல் தொடர்கிறது.

விஷ்ணு கண்ணன் ஒளிப்பதிவில் சில குறுகிய அறையில் காட்சிகளை மிக சிறப்பக  படமாக்கி, அவரது ஒளிப்பதிவு திறமையை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், இந்த ’ஐமா’  படத்தை அனைவரும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

"IMAA" MOVIE REVIEWFeatured
Comments (0)
Add Comment