அவருக்கு நெருக்கமான கதாநாயகன் பாண்டி கமலிடம் நடந்த விஷயத்தை சொல்லி பாலியல் வன்மத்தில் ஈடுபட்ட, அந்தப் பெண்ணை கற்பழித்தவர்களை பழிவாங்க துடிக்கிறார். இந்த சூழ்நிலையில் கதாநாயகி மேக்னா ஏலன் அந்த கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் உள்ள செல்போன் கடையில் பணிபுரிகிறார். அங்கு ஊட்டியில் உள்ள கிராமத்தில் கற்பழித்த மூவரையும் ஒவ்வொருவராக சந்தித்து காதல் செய்வதுபோல் நடிக்கிறார். அந்த மூன்று இளைஞர்களையும் பழிவாங்க ஆடுகளம் நரேனுக்கு உதவியாக இருக்கிறார். கற்பழித்து கொன்ற அந்த மூன்று கயவர்களை ஆடுகளம் நரேனும் மேகனா ஏலனும் இணைந்து பழி வாங்கினார்களா? இல்லையா? என்பதுதான் “இந்த க்ரைம் தப்பில்ல” படத்தின் மீதி கதை..
இந்தப் படத்தில் கதாநாயகி மேக்னா ஏலனின் நடிப்பும், துடிப்பான அழகும் அனவரையும் கவரும் விதத்தில் சிறப்பு செய்து இருக்கிறார். பட துவக்கத்தில் துள்ளனான பாடலுக்கு ஏற்ற அவரது நடனம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.
ஆடுகளம் நரேன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன் அனுபவ நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார்.. பாண்டி கமல் ஒவ்வொருவரையும் அடித்து உதைக்கும்போது தனது இயல்பான நடிப்பில் மிளிர்கிறார். அவருக்கு நடிப்பில் இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவை.
முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி மற்றும் இப்படத்தில் நடித்தவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் பரிமளவாசன் இசையில் பாடல் சுமார் ரகம்தான். பின்னணி இசை ஓரளவு பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் AMM.கார்த்திகேயன் மிக அருமையாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இயக்குனர் தேவகுமார் இப்படத்தை இயக்கி இருந்தாலும் பல காட்சிகள் ரசிக்கும்படி இல்லை. ஏற்கனவே இது மாதியான கதைகள் நிறைய வந்திருந்தாலும், வேறு மாதிரியாக காட்சிகளை அமைத்து இயக்கி இருக்கலாம். அதில் கோட்டை விட்டு விட்டார் இயக்குனர் தேவகுமார்.
மொத்தத்தில் “இந்த கிரைம் தப்பில்ல” நமது இளைய சமுதாயத்தை திருத்துகின்ற படம் என்று சொல்லலாம்.
ரேட்டிங் 2/5.
RADHAPANDIAN.