“800” திரைப்பட விமர்சனம்!

CHENNAI:

மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘800’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில்,
மதுர் மிட்டல், மகிமா நம்பியார், நரேன், கிங் ரத்னம், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, திலீபன் வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜாபி, சரத் ​​லோஹிதாஷ்வா, ஜானகி சுரேஷ், ரித்விக், பிருத்வி, மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்..

எழுத்து & இயக்கம் :- எம்.எஸ். ஸ்ரீபதி. ஒளிப்பதிவு :- ஆர்.டி.ராஜசேகர் ஐ.எஸ்.சி. படத்தொகுப்பு :- பிரவீன் கே.எல். இசையமைப்பாளர் :- ஜிப்ரான். தயாரிப்பு நிறுவனம்:- மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் இந்தியாவிலிருந்து, தமிழர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு செல்கிறார்கள். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்றவர்களில் கதாநாயகன் மதுர் மிட்டல்  குடும்பமும் அதில் இருக்கிறார்கள். இந்த சூழலில் தேயிலை தோட்ட வேலைக்காக சென்றவர்கள் அனைவரும் இலங்கையிலேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கதாநாயகன் மதுர் மிட்டலுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு தன் நண்பர்களுடன் விளையாடி ப்ராக்டிக்ஸ் செய்கிறார்.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து சென்ற தோட்டத் தொழிலாளர் தமிழர்களுக்கும்  இலங்கையில் உள்ள சிங்கள இனத்தவர்களுக்கும் பல விதத்தில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.. இந்தப் பிரச்சினையால் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதால் மதுர் மிட்டல் உறைவிட பள்ளியில் சேர்கிறார். அங்கிருந்து கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீச்சில் அபார திறமை கொண்டவராக திகழ்கிறார்.

இந்த சூழ்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி பல நாடுகளிடம் தோல்வி கண்ட நேரத்தில்,  இலங்கை அணியை சேர்ந்தவர்கள் கதாநாயகன் மதுர் மிட்டலை கிரிக்கெட் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ந்த பிறகு மதுர் மிட்டலுக்கு அங்கு பலவித பிரச்சனைகள் ஏற்படுகிறது. இலங்கை அரசியலிலும் அவருக்கு  எதிராக  பலர்  செயல்படுகின்றனர். இந்த பிரச்சனைகளையும், பல எதிர்ப்புகளை எல்லாம் கடந்து இலங்கை கிரிக்கெட் அணிக்காக எப்படி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி,  கதாநாயகன் மதுர் மிட்டல் சாதனை படைத்தார் என்பது தான் இந்த “800”  திரைப்படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் மதுர் மிட்டல் முடிந்த வரை முத்தையா முரளிதரனாக நடிக்க முயற்சி செய்து இருந்தாலும், முத்தையா முரளிதரன் எப்படி இருப்பாரோ அப்படியான தோற்றமும் அவருடைய உடல்வாகு மொழி, பந்தை எப்படிசுழற்றி அடிப்பது..வேக பந்து வீச்சலாளராக மிகவும் கஷ்டப்பட்டு, அதிக அளவில் தனது உழைப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார்.

மாஸ்டர் என்று அழைக்கப்படும் பிரபாகரன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கும் நரேன் அச்சு அசலாக அருமையாக மிக சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நண்பராக கருணா கதாபாத்திரத்தில் வினோத் சாகர்
அதே மாதிரியான  தோற்றத்தில்  மிக அருமையாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக மதுர் மிட்டலின் மனைவியாக வரும் மகிமா நம்பியார் சிறிது நேரம் மட்டுமே வந்து மனதில் நிற்கிறார். நாசர், ஹரி கிருஷ்ணனின் நடிப்பு இப்படத்திற்கு மிகுந்த பலம் சேர்த்து இருக்கிறது.

வேல ராமமூர்த்தி, ரித்விகா, திலீபன், வடிவுக்கரசி, அருள் தாஸ், யோக் ஜாபி, சரத் ​​லோஹிதாஷ்வா, ஜானகி சுரேஷ், ரித்விக், பிருத்வி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்து இருக்கின்றனர்.

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு மற்றும் கபில்தேவ் போன்ற பல கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளி வந்து வெற்றி பெற்றதால், அந்த வரிசையில் இந்த ‘800’ என்ற முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமும் அமைந்து இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை தமிழ் திரைப்படத்திற்கு ஏற்றவாறு கதை எழுதி, திரைக்கதை அமைத்து மிக சிறப்பாக படமாக்கி இருக்கிறார். பலருக்கும் தெரியாத முத்தையா முரளிதரன் கடந்து வந்த பாதையை மிக தெளிவாக அனைவரும் ரசிக்கும் விதத்தில் இயக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு,ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்றவாறு சிந்தித்து செயல்பட்டிருப்பது இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலம் சேர்த்து இருக்கிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி  இசை இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் மிரள வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் “800”  திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் படம் இது.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.

 

"800" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment