“எனக்கு எண்டே கிடையாது” திரைப்பட விமர்சனம்!

சென்னை:

ஹங்ரி வூல்ஃப் புரொடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரித்திருக்கும் படம் “எனக்கு எண்டே கிடையாது” இப்படத்தில் விக்ரம் ரமேஷ், ஸ்வயம் சித்தா, சிவகுமார் ராஜு, கார்த்திக் வெங்கட்ராமன், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

எழுத்து & இயக்கம் :- விக்ரம் ரமேஷ். ஒளிப்பதிவு :- தளபதி ரத்தினம். படத்தொகுப்பு :- முகன்வேல். இசையமைப்பாளர் :- கலாசரண். தயாரிப்பு நிறுவனம்:- ஹங்கிரி ஒல்ப் புரொடக்ஷன்ஸ். தயாரிப்பாளர் :- கார்த்திக் வெங்கட்ராமன்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

கால் டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் யாராவது தன்னுடைய டாக்ஸியில் பயணிக்க வருவார்களா… என்று எதிர்பார்த்து ஒரு மது அருந்தும்  பார் அருகில் தனது காரில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அந்த ஓட்டுனருக்கு  தொலைபேசியில் அழைப்பு வருகிறது.. அப்போது அந்த மது அருந்தும் பாரிலிருந்து ஒரு அழகான இளம் பெண் கவர்ச்சியான உடை அணிந்து கால் டாக்ஸியில் வந்து அமர்கிறார். நள்ளிரவு நேரம் என்பதால் அவரது இல்லத்தில் அந்த இளம் பெண்ணை கொண்டு சேர்க்க செல்லும்போது இருவரும் பேச்சு கொடுத்து தங்களைப் பற்றி பரிமாறிக் கொள்கின்றனர். அந்த அழகான கவர்ச்சியான பெண்ணை அவரது இல்லத்தில் டிராப் செய்யும் போது, அந்த பெண்  கால் டாக்ஸி  ஓட்டுநரை தன் வீட்டிற்கு அழைக்கிறார்.

அந்த கால் டாக்ஸி ஓட்டுனரும் அந்த அழகு பெண் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த வீட்டிற்குள் செல்கிறார். அந்த கால் டாக்ஸி ஓட்டுனருக்கு அந்த பெண் மது விருந்து கொடுக்கிறார். இருவரும் டகீலா என்ற மதுவை கொஞ்சம் கொஞ்சமாக அருந்துகின்றனர். போதை மயக்கத்தில் இருந்த கால் டாக்ஸி ஓட்டுனர் அந்த அழகான இளம் பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விட்டு, அவரது  வீட்டிலேயே சந்தோஷமாக இரவு முழுதும் தங்கி, காலையில் எழுந்திருக்கிறார்.. அப்போது எதிர்பாராத விதமாக அந்த அழகு இளம் பெண் கீழே விழுந்து இறந்து விடுகிறார்.

அந்த இளம் பெண் இறந்ததை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போன கால் டாக்ஸி ஓட்டுநர் அந்த வீட்டை விட்டு வெளியேற  நினைக்கிறார். ஆனால் அந்த வீட்டில் கதவுகள் திறக்கவில்லை. காரணம் அந்த வீட்டுக்கு வெளியே செல்ல வேண்டுமென்றால் கதவுக்கு அருகில் உள்ள பாஸ்வேர்ட் நம்பர் அழுத்தினால் தான் அந்த கதவுகள் திறக்கும்.  இல்லாவிட்டால் கதவுகள் திறக்காது. இறந்து போன அந்தப் இளம் பெண் வீட்டில் மாட்டிக்கொண்ட கால் டாக்ஸி ஓட்டுனர் வெளியில் வருவதற்கு பல விதத்தில் முயற்சி செய்கிறார் ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. இந்த சூழ்நிலையில்  அந்த ஓட்டுனர் அங்குள்ள ஒரு அறைக்குள் செல்கிறார். அந்த அறைக்குள் ஒரு வயதானவர் தலையில் அடிபட்டு மூர்ச்சை ஆகி  பிணமாக கிடக்கிறார்.

இந்நிலையில்  ஒரு திருடன் வெளியிலிருந்து பாஸ்வேர்ட் நம்பரை அழுத்தி அந்த வீட்டிற்க்குள் நுழைகிறான். அதன் பிறகு பின்னாலேயே பண மூட்டையுடன் அரசியல்வாதி ஒருவர் வருகிறார்.. எல்லோரும்  வீட்டுக்குள் வந்த பிறகு அங்குள்ள கதவு மூடிக் கொண்டு  இந்த மூவரும்வெளியில் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர். கால் டாக்ஸி ஓட்டுனர், திருடன்,  அரசியல்வாதி ஆகிய மூவரும்  அந்த வீட்டிலிருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் “எனக்கு எண்டே கிடையாது”  படத்தின் மீதி கதை.

கால் டாக்ஸி ஓட்டுனராக புதுமுக நடிகர் விக்ரம் ரமேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும்  இப்படத்தை  அவரே கதை எழுதி இயக்கியிருக்கிறார். முதல் படம் போல் அல்லாமல் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகி  ஸ்வயம்சித்தாவை அவர் முதன் முதலில் பார்த்து ரசிக்கும்போதும்,  அவருடன் சேர்ந்து மது அருந்தும்போதும், இருக்கையில் அமர்ந்து முத்தக் காட்சியில் கட்டி பிடித்து கீழே விழும் காட்சிகளிலும் இளைஞர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்யும் அளவிற்கு  நடிப்பில் அசத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம்சித்தா ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், அழகான கவர்ச்சியை காட்டி அனைவரையும் காம பார்வை வீச செய்து விடுகிறார்.

அரசியல்வாதியாக வரும் சிவகுமார் ராஜு,  திருடனாக வரும் கார்த்திக் வெங்கட்ராமன் இருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கலாச்சரணின் இசையில் உருவான பாடல் ஓகே ரகம்தான். பின்னணி இசை இப்படத்தின் திரைக்கதை ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் பல்வேறு கோணங்களில் காட்சிகளை தனது ஒளிப்பதிவில் படமாக்கி அனைவரையும் ரசிக்க வைக்கிறார்.

கிரைம், சஸ்பென்ஸ், த்ரில்லர் நிறைந்த இந்த திரைப்படத்தை ஜாலியாக திரைக்கதையில் எந்த ஒரு தொய்வும் ஏற்படாமல் இயக்குனர் விக்ரம் ரமேஷ் கதையை நகர்த்தி இருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஒரே வீட்டிற்குள் மூன்று கதாபாத்திரங்களையும் அடைத்து வைத்து,  அதைத் தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாமே திரைக்கதையை வலுவாக்கி பிரமிக்க வைத்து விடுகிறது.

மொத்தத்தில், ‘எனக்கு எண்டே கிடையாது’ படம் ரசிகர்களை கவர்ந்து விடும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

 

"Enakku Ende Kidaiyaathu" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment