“சமாரா” திரைப்பட விமர்சனம்!

சென்னை:

பீக்காக் ஆர்ட் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.கே.சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம்தான் “சமாரா” இப்படத்தில் பரத், ரகுமான், சஞ்சனா திபு, பினோஜ் வில்லியா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, விவியா சாந்த், வீர் ஆர்யன், தினேஷ் லம்பா, சோனாலி சூடான், பிஷால் பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

எழுத்து, இயக்கம் – சார்லஸ் ஜோஸப், ஒளிப்பதிவு – சினு சித்தார்த், இசை – தீபக் வாரியர், பின்னணி இசை – கோபி சுந்தர், பாடல்கள் – படத் தொகுப்பு – பாப்பன், சண்டை பயிற்சி இயக்கம் – தினேஷ் காசி, நடனப் பயிற்சி இயக்கம் – டேனி பவுல், பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் ஓரிடத்தில் பனிமலையில் சில உடல்கள் சிதறிக் கிடக்க அங்கே விசாரணைக்கு வருகிறார் காவல்துறை அதிகாரி ரகுமான். அங்கே அவர் வந்த சமயத்தில் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் உடல்களை அவசரமாக அடக்கம் செய்வதைத் தடுத்து அந்த உடல்களை வைத்து விசாரணையை துவங்குகிறார் ரகுமான்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் எதிரிகள் மீது பயன்படுத்த ஹெச்.டி.டபிள்யூ என்ற வைரஸை மனிதர்களிடத்தில் செலுத்தப்பட்டு,சோதித்துப் பார்க்கும்போது  அந்த வைரஸின் விளைவு மிகக் கொடூரமாக இருந்ததால்..அந்த சோதனைக்கு உள்ளானவர்களை எரித்துக் கொல்ல உத்தரவிடுகிறார் ஹிட்லர். இதனை உலகப் போரில் பயன்படுத்தினால் இந்த வைரஸ் அவர்களது வீரர்கள் மீதே பாயக் கூடும் என்பதை உணர்ந்த ஹிட்லர் பயந்து போய், அதை போரில் பயன்படுத்தாமல் தவிர்த்து விடுவதோடு, முற்றிலுமாக அழித்தும் விடுகிறார்.  உலகையே பயமுறுத்திய ஹிட்லரை அச்சம் கொள்ள வைத்த அந்த வைரஸ் பாதுகாக்கப்பட்டு, ஒரு தீவிரவாத குழு, இந்தியாவில் அதனை பயன்படுத்தி மிகப்பெரிய பயோ வாரை உருவாக்க  முயற்சி செய்கிறார்கள்.  அவர்களுடைய முயற்சியை முறியடிக்கும் பணியில் ஈடுபடும் ரகுமான், அதை எப்படி முறியடிக்கிறார்?இந்தியா மீது பயோ வார் தொடுத்தவர்கள் யார்.. என்பதை கண்டுபிடித்தாரா? என்பதை கிரைம், திரில்லர் கலந்த முறையில் சொல்லும் படம்தான்  ‘சமாரா’

ஒரு கண்டிப்பான காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் ரகுமானுக்கு மிகவும்  பொருந்தமாக இருப்பதால், அதன் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருப்பதை பாராட்டலாம். இதுபோல் மற்ற எந்த நடிகருக்காவது இந்த மாதிரியான கதாபாத்திரம் பொருந்துமா என்பது தெரியவில்லை. தன்னுடைய கம்பீரமான நடை, உடை, பாவனையில் கண்டவுடனேயே கவர்ந்திழுப்பதைப் போல அவரது தோற்றமும் அமைந்திருப்பது அபாரம் என்றாலும் நடிப்பில் அசத்தி விட்டார். கடைசி வரை அவர் என்ன பதவி வகிக்கிறார் என்பது இமாச்சல பிரதேச காவல்துறைக்கு தெரியாதது போலவே நமக்கும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது. அவர் ஏற்று நடித்திருக்கும்  ‘ஆண்டனி’ கதாபாத்திரம் தனது ஸ்டைலான ஆக்சன் காட்சிகளில் சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் ரகுமான்.

நடிகர் பரத்துக்கு அனைவரும் வியக்கின்ற அளவுக்கு ஒரு உன்னதமான கதாபாத்திரம். இடைவேளைக்குப் பிறகுதான் அறிமுகம் ஆகிறார் என்றாலும் அவரது கதாபாத்திரமில்லாமல் இந்தக் கதையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இடைவேளைக்குப் பிறகு படம் முழுவதும் அவரை மையமாக வைத்து பயணிக்கும் வகையில் மருத்துவராக, ஆச்சரியமான டிவிஸ்ட் கொடுக்கக் கூடிய விதத்தில் தன் கதாபாத்திரத்தை பரத் மிக கச்சிதமாக செய்திருக்கிறார். 

சஞ்சனா திபு, பினோஜ் வில்லியா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, விவியா சாந்த், வீர் ஆர்யன், தினேஷ் லம்பா, சோனாலி சூடான், பிஷால் பிரசன்னா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

தீபக் வாரியரின் இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருந்தாலும்,  பின்னணி இசை ஒவ்வொரு காட்சிகளிலும்  விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.

சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு பனி மலை எங்கும் பரந்து விரிந்து படம் நெடுக நிறைந்து இருந்தாலும். இமாச்சல பிரதேசத்தின் பனி நிறைந்த பகுதிகளை கூடுதல் அழகாக காட்டி ரசிக்க வைத்திருக்கும், அவரை பாராட்டலாம்.

கதை, எழுதி இயக்கியிருக்கும் சார்ல்ஸ் ஜோசப், ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதையை சர்வதேச தரத்தில் ஆங்கில படங்களுக்கு நிகராக இந்த  திரைப்படத்தை இயக்கிருக்கிறார்.  ஆனாலும் திரைக்கதையில் தெளிவு இல்லாமல் சொதப்பி கோட்டை விட்டு விட்டார். முதல் பாதியில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காட்சிகளாக திரைக்கதையில் அமைத்திருக்கும் இயக்குநர், பின் பாதியில் அனைத்துக் கதாப்பாத்திரங்களையும் ஒன்றாக இணைத்து படத்தை முடித்திருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘சமாரா’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

 

 

 

"Samaraa" Movie ReviewFeatured
Comments (0)
Add Comment