‘டைகர் 3’ன் “லேகே பிரபு கா நாம்” பாடலில் 7 அதிரடியான தோற்றங்களுடன் இணையத்தை பற்றியெரிய விடும் கத்ரீனா கைப்!

CHENNAI;

நம்மிடம் இருப்பவர்களில் மிகவும் அழகான நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைப், ‘டைகர் 3’ படத்தில் இருந்து வரும் அக்-23ஆம் தேதி வெளியாகவுள்ள “லேகே பிரபு கா நாம்” பாடலில் இதயங்களை உருக வைக்கவும் இணையத்தை பற்றியெரிய வைக்கவும் தயாராகி வருகிறார்.

கத்ரீனா கைப் ‘டைகர் 3’ன் “லேகே பிரபு கா நாம்” பாடலில்  7 அதிரடியான தோற்றங்களில் தோன்றுவதுடன் தனது ஒட்டுமொத்த திரையுலக பயணத்தில் மிகசிறந்த பாடல்களில் ஒன்றாகவும் இருக்கும் என்றும் கூறுகிறார்.

கத்ரீனா கூறும்போது

“லேகே பிரபு கா நாம்” பாடல் கண்ணை கவரும் பாடலாக உருவாகி இருக்கிறது. துருக்கியின் கப்படோசியாவின் சுவாசத்தை திணறவைக்கும் பின்னணியில் அமைந்துள்ள இந்த பாடல் எனக்கு காட்சி ரீதியாக மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாக இருக்கும். மாஷால்லா மற்றும் ஸ்வாக் சே ஸ்வாகத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த வைபவி மெர்ச்சன்ட்டுடன்  மீண்டும் ஒருமுறை மீண்டும் இணைந்திருக்கிறேன்” என்கிறார் .

மேலும் அவர் கூறும்போது, “எனக்கான பிரமிக்க வைக்கும் தோற்றங்களை உருவாக்குவதில் உண்மையிலேயே சிறந்து விளங்கும் அனைதா ஷராஃப் அடஜானியா எனது அலங்காரத்தை மேற்கொண்டுள்ளார். “லேகே பிரபு கா நாம்” பாடலில் ஒவ்வொன்றும் மறுக்க முடியாத கவர்ச்சி மற்றும் தனித்துவமான சில் -அவுட் தோற்றங்களை வெளிப்படுத்தும் விதமாக  7 குறிப்பிடத்தக்க தோற்றங்களை அனைதா  வடிவமைத்திருக்கிறார்” என்கிறார்.

நேற்று வெளியிடப்பட்ட இந்த பாடலின் டீசர் உடனடியாக வைரலானது.  பிரீத்தம் இசையமைப்பில் பென்னி தயாள் மற்றும் அனுஷா மணி பாடியுள்ள இந்தப்பாடலில் சல்மான் கானும் கத்ரீனாவும் நம்பமுடியாத கெமிஸ்ட்ரியை  வெளிப்படுத்தி உள்ளனர். இந்த பாடலில் இவர்கள் இருவருக்குமான அழகிய தோற்றத்தை பார்க்கும்போது இது இந்த பண்டிகை சீசனில் ஒரு பார்ட்டி ஆந்ததமாக நிச்சயமாக மாறும்.

கத்ரீனா  மேலும் கூறும்போது,

“டைகர் வரிசையில் இருந்தும் வெளியாகும் பாடல்கள் எப்போதும் சூப்பர்ஹிட் பாடல்களாகவே இருந்திருக்கின்றன. அந்தவகையில்  இந்த “லேகே பிரபு கா நாம்” பாடலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இருக்கும் ” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில்,

“டைகர் படங்களில் பாடல்கள்  ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாகவே இருந்திருக்கின்றன.  இந்த பாடலில் டைகர் மற்றும் சோயா இருவருக்கும் இடையேயான அதிர்வையும் சக்தியையும் ஒரு புதிய பாணியில் வைபவி உள்ளடக்கி இருக்கும் விதத்தை நான் ரசிக்கிறேன். எங்கள் இருவரிடமிருந்தும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாடலின் துடிப்பான மற்றும் ஆற்றல் மிக்க உணர்வை இது உள்ளடக்கியது” என்கிறார்.

எப்போதும் சல்மான் கானுடன் நடனம் ஆடுவதை விரும்புகிறார் கத்ரீனா. இதுபற்றி  அவர் கூறுகையில்,

“சல்மான் கானுடன் நடனம் ஆடுவது அற்புதமானது. மேலும் இந்த “லேகே பிரபு கா நாம்” பாடலின் மூலம் பல ஆச்சரியப்படத்தக்க நினைவுகளை என்னுடன் எடுத்து செல்கிறேன். ஸ்வாக் சே ஸ்வாகத்  பாடல் அளவுக்கதிகமான அன்பை பெற்றது போல இந்த “லேகே பிரபு கா நாம்” பாடலு ம் இன்னும் உயரம் தொடும் என நம்புகிறோம்” என்கிறார்.

சல்மான் கான் & கத்ரீனா கைப் இந்திய சினிமா வரலாற்றில் எப்போதுமே மிகப்பெரிய ஆன்-ஸ்கிரீன் ஜோடி. அவர்கள் வரலாற்று வெற்றிகளையும் தலைமுறை தாண்டிய பாடல்களையும் வழங்கியுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் ஆதித்யா சோப்ராவின் ஸ்பை யுனிவர்ஸின் ‘டைகர் 3’யில் பெருமைமிக்க டைகர் மற்றும் சோயா என்கிற தங்களது சூப்பர் ஏஜென்ட்  கதாபாத்திரங்களுக்கு மீண்டும் ஒருமுறை திரும்பியுள்ளதுடன் இணையத்தையும் அதிரவைத்துள்ளனர். மனீஷ் சர்மா இயக்கியுள்ள ‘டைகர் 3’ இந்த வருடம் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறு தீபாவளியில் வெளியாகிறது.

 

FeaturedTiger- 3 Prabhu Ka Naam. NEWS
Comments (0)
Add Comment