அரிமாபட்டி சக்திவேல் திரைப்படம் – விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் - விமர்சனம் தயாரிப்பு : லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் நடிகர்கள் : சார்லி, பவன், மேக்னா எலன், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ் மற்றும் பலர். இயக்கம் : ரமேஷ் கந்தசாமி அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கி இருக்கும் திரைப்படம் 'அரிமாபட்டி சக்திவேல்'. கிராமம் ஒன்றில் நடைபெற்ற சாதிய ஒடுக்குமுறை பற்றிய உண்மை சம்பவங்களை தழுவி உருவாகி இருக்கிறது இப்படம். ஆனால் இப்படம் ரசிகர்களைக் கவரும்படி இருக்கிறதா ? கதை திருச்சி அருகே அருகே அரிமாபட்டி என்ற ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வழி வகுத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் நயாகன் சக்திவேல்(பவன்) வேறு ஒரு ஜாதி பெண்ணை காதலிக்கிறான். இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்புக் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி நாயகன் சக்திவேல் நாயகி (மேகனா) வை வெளியூருக்கு கூட்டி சென்று மணமுடிக்கிறார். இதன் பிறகு கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்த கிராமத்து மக்கள் இவர்களது காதலை ஏற்று கொண்டார்களா? இதன் பிறகு என்ன என்ன பிரச்சனைகளை இவர்கள் சந்தித்தார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை. சமீப காலமாக சாதிய ஏற்றத்தாழ்வு பேசும் படங்கள் அதிகம் வரும் தமிழ் சினிமாவில் அடுத்த படமாக வந்துள்ளது இப்படம். சக்திவேலாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் பவன் நடிக்க முயற்சித்திருக்கிறார். மூத்த நடிகர் சார்லி வழக்கம் போல் தனது நடிப்பால் ஈர்க்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை மேக்னா எலன் இயக்குநர் சொன்னதை மட்டும் கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்படுத்திய ஈர்ப்பை படம் ஏற்படுத்த தவறிவிட்டது ஜே பி மேனின் ஒளிப்பதிவும், மணி அமுதவனின் இசையும் படத்திற்கு தேவையானதைச் செய்துள்ளது. அரிமாபட்டி சக்திவேல்- சமூகத்திற்கு தேவையான படைப்பு தான் ஆனால் சினிமா ரசிகர்களுக்கு ?

Comments (0)
Add Comment