கார்டியன் திரை விமர்சனம் – Guardian Movie Review
இயக்கம் - சபரி, குரு சரவணன்
நடிகர்கள் - ஹன்ஷிகா, வித்யா பிரதீப், சுரேஷ் மேனன், மொட்டை ராஜேந்திரன், ஶ்ரீமன்.
கதை - ஹன்சிகா மோட்வானி சிறுவயதிலிருந்து ஆசை இல்லாதவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் இந்த நிலையில் அவர் சென்னைக்கு பயணமாகிறார் அங்கு அவர் நினைத்ததெல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது இதற்கெல்லாம் காரணம் ஒரு ஆவி என்பது தெரிய வருகிறது அந்த ஆவியை உதற நினைத்தால் அந்த நேரத்தில் அந்த ஆவியின் கதை தெரிய வருகிறது அந்த ஆவிக்காக அவர் என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் மீதி கதை
ஒரு பெண்ணை கதற கதற கதற கதற துடிக்க வைத்துக் கொல்லும் நான்கு பேர், அவர்களை கொல்ல நினைக்கும் ஆவி, அந்த ஆவிக்கு உதவும் பெண் இது தான் கதையின் மையம். தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து போட்ட கதை. பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து இது மாதிரியான ஆவி திரைப்படங்கள் எக்கச்சக்கமாக வந்திருக்கின்றன. அதில் எந்த புதிய மாற்றமும் இல்லாமல் அதே போல் வந்திருக்கும் படம் தான் கார்டியன்.
பல படங்களில் பார்த்து ரசித்த ஹன்ஷிகாவை இப்படத்தில் பார்ப்பது கொஞ்சம் பாவமாக தான் இருக்கிறது. கதை அவரைச் சுற்றித்தான் என்றாலும் படத்தில் அவருக்கு பெரிதாக இந்த ஒரு வேலையும் இல்லை.
ஸ்ரீமன் சுரேஷ் மேனன், ராயன் என அனைவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளார்கள். மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை இருவரும் சிரிக்க வைக்க முயன்றுள்ளார்கள். ஆனால் சிரிப்பு தான் வரவில்லை.
கார்டியன் காமெடி ஹாரரா? இல்லை திரில்லரா என படம் முடியும் வரை சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது. படம் முடிக்கும் சந்தேகம் தீரவில்லை.
சாம் சி எஸ் இசை புதிதாக எதுவும் இல்லை. ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
அங்கங்கே ரசிக்க சிறு தருணங்கள் இருந்தாலும் மொத்தத்தில் கார்டியன் நம்மைக் காக்கவில்லை.