காடுவெட்டி நடுநாட்டுக்கதை திரைப்படம் படம் எப்படி இருக்கு?
ஆர்.கே.சுரேஷின் காடுவெட்டி நடுநாட்டுக்கதை திரைப்படம் படம் எப்படி இருக்கு?
இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கியிருக்கிறார். மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் எடுக்கப்பட்டு இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.
தலைப்பிலிருந்தே மஞ்சள் விளம்பரம் தொடங்கி விடுகிறது. குறிப்பிட்ட ஒரு சார்பு மக்களின் எண்ணங்களை தூக்கிப்பிடிக்கும் படமாக இப்படம் வந்துள்ளது. படத்தில் நகரத்தில் காதலை மக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், கிராமத்தில் எவ்வாறு அணுகின்றனர் என்பதை சொல்கிறார்கள் அது உண்மையா என்பது வேறு விசயம். நகரத்தில் உள்ள மக்களுக்கு போதுமான கல்வி அறிவும் பொருளாதார மேம்பாடும் இருப்பதால் நகரத்தில் பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்கின்றனர் எனக் கூறி நகரத்து காதல் கதையை முடிக்கின்றார்கள். ஆனால் கிராமத்து பக்கம் கதை வேறு !
கிராமத்து காதல் கதையில் காதலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல், காதலர்களின் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை விளக்க முயற்சிக்கின்றார். ஒரு காதல் காதலிப்பவர்களின் பிரச்சனை மட்டுமல்ல அது சமூகப்பிரச்சனை எனும் அரிய கருத்தை சொல்லியுள்ளனர்.
குறிப்பாக நகரத்து காதல் கதையில் பெற்றோர்கள் மட்டும் கலந்து பேசி தங்களது குழந்தைகளின் காதல் திருமணத்தில் முடிய பக்கபலமாக நிற்கின்றனர். ஆனால் கிராமத்து காதல் கதையில், காதலுக்கும் காதலர்களுக்கும் சம்பந்தமில்லாத ஊர்கார்களால் அந்த காதலும் காதல் செய்யும் பெண்ணின் குடும்பமும் எவ்வாறு சிரமங்களை எதிர்கொள்கின்றது என்பதை காட்ட முயல்வது நன்று.
படத்தின் கதாநாயகனான சுரேஷ் தான் சார்ந்த சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகளை தீர்க்கும் பெரிய நபராக வருகின்றார். குறிப்பாக காதல் திருமணம் செய்து அவதிப்படும் ஒரு பெண்ணை அழைத்து வருவதற்கான காரணமும், அவர் நடந்துகொள்வதைப் போல் வெளியில் காட்டிக் கொள்ளும் காரணமும் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. அவரது சமூகத்தை சார்ந்தவருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்தார் எனக் கூறி ஒரு காட்சி வருகின்றது. சாதிச் சங்கத் தலைவராக இருக்கும் ஆர்.கே. சுரேஷால் எப்படி அரசு வேலை வாங்கித் தரமுடியும்.
இசை ஒளிப்பதிவு எல்லாம் தேவையான வேலையை மட்டும் செய்துள்ளது.
படத்தில் நாடகக் காதல் என்ற வார்த்தை அதிகம் வருகிறது சமூகபிரச்சனையை சொல்லும் கதைக்களத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம் மொத்தத்தில் காடுவெட்டி- வெட்டி பஞ்சாயத்து
காடுவெட்டி ஒரு சாராரின் பிரச்சார பட தோரணையில் இருக்கிறது.