Garfield The Movie (2024) Review
Sony Pictures Entertainment India தயாரிப்பில், அனிமேசன் வகையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் Garfield The Movie (2024)
Jim Davis என்பவரின் கைவண்ணத்தில் உருவான ஒரு அமெரிக்க நகைச்சுவை தொடர்தான் Garfield .
காமிக்ஸ் வகையில் உருவாகி உலகம் முழுக்க அனைவரையும் கவர்ந்த இந்த தொடர் படமாக உருவானது.
இதுவரை இந்த தொடரில்
1 Garfield The Movie (2004)
2 Garfield : A Tail of 2 Kitties (2006)
3 Garfield Goes Real (2007)
4 Garfield 's Fun Fest (2008)
5 Garfield 's Pet Force (2009)
என ஐந்து படங்கள் வெளிவந்திருக்கிறது.
5 படங்களும் பம்பர் ஹிட் ஆன நிலையில் 6 வது படமாக Garfield The Movie (2024) வெளியாகியுள்ளது.
முந்தைய படங்கள் போலவே இந்த பதிப்பும் கலக்கலான திரைக்கதையில் அட்டகாசமான காமெடியில் உலகம் முழுக்க சிறுவர்களை கவர்ந்து வருகிறது.
Garfield என்பது, ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்! தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie உற்ற நண்பன்
இருவரும் லூட்டி அடிப்பதில் சமர்த்தர்கள். ஒரு கட்டத்தில் , Vic என்கிற தனது தந்தையோடு Garfield , சந்தித்து இணையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது. Garfield மற்றும் Odie ஆகிய இருவரின் வாழ்வில் மாற்றங்கள் உண்டாகின்றன. அவர்கள் சந்திக்கும் சமபங்கள் தான் இந்த திரைப்படம்.
Chris Pratt , Samuel L .Jackson Harvey Guillen முன்னணி நடசத்திரங்கள் படத்தில் குரல் தந்திருக்கின்றனர். Mark Dindal படத்தை இயக்கியுள்ளார். John Debney படத்தின் இசையமைப்பாளர்.Mark Keefer படத்தை தொகுத்துள்ளார்.
குழந்தைகளுக்காகவே உருவாகியிருக்கும் இந்த அழகான அனிமேசன் படத்தை இந்த கோடையில் கொண்டாடி மகிழுங்கள்.