பார்த்திபனின் டீன்ஸ் பட விமர்சனம்
பார்த்திபனின் டீன்ஸ் படம் எப்படி இருக்கு ?
பார்த்திபன் இயக்கத்தில் 13 டீன் குழந்தைகள் நடிப்பில் இது ஒரு அட்வெஞ்சர் திரில்லர். ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஒரு தமிழ் படமாக வந்துள்ளது டீன்ஸ்
வழக்கமாக வித்தியாசமான களத்தில் மட்டுமே படம் பண்ணும் பார்த்திபன் இயக்கத்தில் ஏலியன் டீன் பசங்க படமாக வந்துள்ளது இந்தப்படம். பார்த்திபன் இயக்கத்தில் புது முயற்சியாக இந்த படத்தை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
சரி 13 சின்னப்பசங்க அம்மா அப்பாவுக்கு பாடம் புகட்ட நினைச்சு, ஸ்கூல கட் பண்ணி, பக்கத்து ஊருல இருக்க பாட்டி வீட்டுக்கு, காட்டு வழியா போறாங்க.. போற வழியில ஒவ்வொருத்தரா காணாம போறாங்க.. ஏன் எப்படினு இண்டர்வெல்லுக்கு அப்புறம் ஏலியன கூப்பிட்டு வந்து கதை சொல்லிருக்காங்க..
13 டீன் ஏஜ் குழந்தைகளை வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார். அந்த 13 குழந்தைகளும் ஒவ்வொன்றும் போட்டி போட்டு நடித்தும், டான்ஸ் ஆடியும் தன் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். பார்த்திபன்
அய்யங்காளி கேரக்டர் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது.சாராவின் மென்மையான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
அபூர்வா, நைனிகா, அபில், நபில், டிலன் நன்றாக நடித்துள்ளனர். சாமியாராக வரும் அந்த பெண் என எல்லோருமே நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள்.
டீனேஜ் டிராமாவாக ஆரம்பிக்கும் இந்தப்படம் திரில்லராக மாறி பரப்பரப்பாக சென்று முடிகிறது. சிறு பாத்திரத்தில் வரும் யோகி பாபு தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்.
படத்தின் இடைவேளைக்கு பிறகு வரும் பார்த்திபன் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார்.
டி இமான் இசை மிரட்டுகிறது.. பாடல்கள் கேட்கும் படி உள்ளன.
ஒவ்வொரு குழந்தைகளும் காணாமல் போகும்போது மீதி இருக்கும் குழந்தைகளுக்கு திக் திக்... நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஏலியன் ஷிப், சிஜி எல்லாம் ஹாலிவுட் தரத்தில் வருகிறது.
மொத்தத்தில் சிறு குழந்தைகளோடு ஒரு அழகான படமாக வந்துள்ளது இந்த டீன்ஸ்.