மீண்டும் திரையில் மாயாஜாலம் காட்டிய கிளாடியேட்டர் 2
மீண்டும் திரையில் மாயாஜாலம் காட்டிய கிளாடியேட்டர் 2
ரிட்லி தாத்தா விட்ட இடத்திலிருந்தே அப்படியே துவங்குகிறார். அது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
முதல் பாகம் நிகழ்ந்தேறிய 16 வருடங்களுப் பிறகு, இப்படத்தின் கதை துவங்குகிறது. மேக்சிமஸின் மகன்
அவன் எப்படி உயிரோடு இருக்கிறான் யாரவன் என்பதெல்லாம் படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.
ரோமானிய பேரரசுக்கு முடி
சூட்டும் உரிமை கொண்ட
லூசியஸ் வெரஸ் கிளாடியேட்டர் ஆக்கப்படுகிறான். அவனது மனைவியை ரோமப் பேரரசின் படைத்தலைவனான மார்கஸ் அகாக்யுஸ் கொன்றுவிட, அடிமையாகும் லூசியஸ், முன்னாள் அடிமையான மேக்ரினஸின் உதவியுடன் பழிவாங்க முயல்கிறான். ஆனால் விதி வேறு விளையாட்டை ஆடுகிறது.
படத்தில் இருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் தந்திர நரி மேக்ரினஸாக டென்செல் வாஷிங்டன். மனிதர் பின்னியிருக்கிறார்.
கதைக்களம் அதே தான் என்றாலும், கதையின் தொடர்ச்சியை அழகாக எழுதி, பரரபரப்பாக திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். படத்தை விட்ட இடத்தில் இருந்து துவங்குவதும், அதை இறுதி வரை பரபரப்பாக கொண்டு சென்றதும் அழகு.
படத்தில் வரும் முதல் போர்க் காட்சியிலேயே அந்த பிரம்மாண்ட உலகிற்குள் நம்மை அழைத்து போய் விடுகிறார்கள். படம் முழுக்க நம் கண்கள் விரியும் பிரம்மாண்டம்.
கிளாடியேட்டர் அரங்கம், அதில் நடக்கும் சண்டைக்காட்சிகள் எல்லாமே விருந்து.
முதல் பாகத்தின் பெருமையை குலைத்து விடாமல் இரண்டாம் பாகத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
கிளாடியேட்டர் மிஸ் பண்ணக்கூடாத ஹாலிவுட் விருந்து !
மீண்டும் திரையில் மாயாஜாலம் காட்டிய கிளாடியேட்டர் 2