ஜியோ ஸ்டூடியோஸ் & ஏ ஆர் ரஹ்மானின் ‘99 ஸாங்ஸ்’ இந்தியா முழுவதும் வெளியாகிறது!

ஜியோ ஸ்டூடியோஸ் & ஏ ஆர் ரஹ்மானின் ‘99 ஸாங்ஸ்’, 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. ரஹ்மானின் முதல் தயாரிப்பான இசையுடன் இணைந்த இந்த காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ‘99 ஸாங்ஸ்’, 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. இசையை ஆன்மாவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான இந்த காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இன்று வெளியிடப்பட்ட இந்தி பதிப்பின் டிரைலர், கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடன் இத்திரைப்படத்தின் மாயஜால இசை உலகத்தின் கதவுகளை சற்றே நமக்கு திறந்து காட்டுகிறது.

பல்வேறு பிரத்யேக சிறப்பம்சங்களை தாங்கி ‘99 சாங்ஸ்’ உருவாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மானின் முதல் தயாரிப்பான இந்த லட்சியப் படைப்பின் இணை கதாசிரியரும் அவரே ஆவார். ‘தி தேவாரிஸ்ட்ஸ்’ மற்றும் ‘பிரிங் ஆன் தி நைட்’ புகழ் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திறமைமிக்க நடிகரான ஏஹன் பட்டை ‘99 சாங்ஸ்’ மூலம் ரஹ்மான் அறிமுகப்படுத்துகிறார். நடிகை எடில்ஸி வர்காஸுக்கு ஜோடியாக ஏஹன் பட் நடிக்கிறார்.

திரைப்படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ ஆர் ரஹ்மான், “என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸின் சார்பாக இந்த பரீட்சார்த்தமான திரைப்படத்திற்காக ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது.. பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே ‘99 சாங்ஸ்’-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது,” என்றார்.

2021 ஏப்ரல் 16 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தியா முழுவதும் ‘99 சாங்ஸ்’ வெளியாகிறது. ஜியா ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

 

FeaturedJio Studios & A.R. Rahman’s 99 Songs to Release in Theatres
Comments (0)
Add Comment