2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்நிலையில் தேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா இன்று நடைபெற்றது .
கலைப்புலி S தாணு பேசியதாவது,
“இன்றைய சூழலில் தம்பி வெற்றிமாறனை அறிமுகப்படுத்தியது தம்பி தனுஷ் தான். தனுஷ் தம்பி சொல்லும் போது வெற்றியோடு நாம் பண்ணுவோம் என்றார். வருங்கால இயக்குநர்கள் வெற்றியைப் பின்பற்ற வேண்டும். ஒரு கட்டத்தில் வெற்றிமாறம் என்னிடம் சார் இந்தப்படத்திற்காக வாங்கிய பணத்தை தந்துவிடுகிறேன் என்று சொன்னார். தேதி குறிப்பிட்ட பின் அவர் தன்னை வருத்தி வேலை செய்தார். அவரிடம் இருக்கும் உழைப்பு தான் அவரை உயர்த்துகிறது. படத்தின் எடிட்டிங் நேரத்தில் அவருக்கு சிக்கன்குணியா நோய் வந்துவிட்டது. ஆனாலும் அதைத்தாங்கிக் கொண்டு வேலை செய்தார். அவரின் இலக்கு பணமல்ல வெற்றி தான். அதுக்குத் தான் அவருக்கு வெற்றிமாறன் என்ற பெயர்.
வெற்றிமாறனின் உழைப்புக்கு நான் என்றும் உதவியாக இருப்பேன். என்றும் அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன். இன்னும் இந்தப்படத்தில் நிறையபேர்களுக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஜீவி பிரகாஷுக்கு இசைக்கு என்று நம்பினேன். நடிகர் தனுஷுக்கு இந்த விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் ரவுண்டிலே தனுஷுக்கு விருதை எடுத்து வைத்துவிட்டார்கள். 1992-ல் எனக்கு பாலுமகேந்திரா எனக்கு ஒருவிருது வாங்கிக் கொடுத்தார் . அதன்பிறகு தம்பி வெற்றிமாறன் வாங்கிக் கொடித்திருக்கிறார். அதற்காக நடிகர் தனுஷுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன் ” என்றார்.
வெற்றிமாறன் பேசியதாவது,
ஒரு படம் பண்னும்போது அந்தப்படத்தோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு மேடை கிடைக்கும். ஆனால் எங்களுக்கு ரெண்டு மேடை கிடைத்துள்ளது.இந்தப்படத்தில் சமூகநீதிக்கான ஒரு உரையாடல் இருந்தது .அதேநேரம் இந்தப்படத்தை மெயின்ஸ்ட்ரீம் படமாக பண்ணவும் செய்தோம். இந்தமாதிரியான விருது படத்தில் உழைத்தவர்களுக்கு ஒரு உற்சாகம் தரக்கூடியது. மீடியா இந்தப்படத்தை கொண்டு சேர்த்தது. வணிக வெற்றிக்கு மீடியா ஒத்துழைப்பு கொடுத்தது. ஒரு படம் நல்லா வரும்னா அது தன்னைத் தானே சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இந்தப்படத்தில் எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது. குடும்பம் மனைவி அக்கா,அப்பா, குழந்தைகள், மற்றும் என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. என் உதவி இயக்குநர்கள் மிகுந்த மனபலம் வாய்ந்தவர்கள். என் எமோஷ்னல் கோபத்தை எல்லாம் தாங்கிக்கொள்வார்கள்.
என் கேமராமேன் வேல்ராஜ் சார் ரொம்ப நேர்த்தியாக செய்திருந்தார். ஜீவி பிரகாஷ் பேக்ரவுண்ட் சாங்ஸ் ரொம்ப ஸ்பெசலா இருந்தது. ஜாக்சன் நான் தயாரிப்பாளரிடம் போடுற சண்டையை அவர் போட்டுவிடுவார். அவருக்கும் நன்றி. ராமர் மேடைக்கு வந்தாலே பயம்.. எடிட்டிங் வேலையை அவர் எனக்காக காத்திருந்து காத்திருந்து செய்தார். அவருக்கு நன்றி. எனக்கு கிடைக்கும் நடிகர்கள் எல்லாருமே எனக்கு கிடைத்த கிப்ட். கென் தான் இந்தக்கதைக்கு முதல் தொடக்கம். சிவசாமிக்காக கூட ரெண்டு மூனு பேரிடம் போய்..அதன்பின் தான் தனுஷ் வந்தார். கென்னை தனுஷ் நன்றாக ஊக்கப்படுத்தினார். மஞ்சுவாரியார் நடிப்பு தான் இந்தப்படத்தை குடும்பத்திற்காக படமாக மாற்றினார். தனுஷ் எப்போதும் போல என்னை நம்பி நடித்தார். தனுஷிடம் கதை சொன்னதும் அவர் யார் மகன் கேரக்டர் என்று கேட்டார். அதுவே ஆச்சர்யமாக இருந்தது. தாணு சார் இந்த கதையை நாலுபக்கம் படித்துவிட்டு ஓ.கே பண்ணுவோம் என்றார். ரொம்ப ஸ்ட்ரெஸ்புல் வொர்க்காக இருந்தது. குறிப்பாக டப்பிங்கில் எல்லாம் என்னால் முழுதாக இருக்க முடியவில்லை. நம் வார்த்தையை நம்பி பணம் போடுபவர்களுக்கு நாம் திருப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும். அதை நாம் கவனமாக கையாண்டு வந்தேன். தாணு சார் இந்தப்படத்திற்கு கிடைத்தது தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு போனதற்கு கிடைத்தது” என்றார் .
போன் மூலமாக தனுஷ் பேசியதாவது,
“ரொம்பச் சந்தோசமா இருக்கு. என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு மீடியா தொடர்ந்து கொடுக்குற சப்போர்ட்டுக்கு நன்றி. அசுரன் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கு. தாணு சார் வெற்றிமாறனுக்கு ரொம்ப நன்றி” என்றார்.
எடிட்டர் ராமர் பேசியவை ,
இந்த இடத்தில் தனுஷ் சார் இல்லாதது ஒருகுறையாக இருகிறது. இது விருது கிடைத்தது போல இருக்கிறது . தனுஷ் சாரை ஸ்பாட்டில் பார்த்த போது வெற்றிமாறனோட சின்ன சின்ன கரெக்ஷன்களை மெலிதாக தான் பேசுவார்கள். ஆனால் அது ஸ்கிரீனில் வேறுமாதிரி இருக்கும் . தனுஷ் சார் அந்த காலில் விழும் காட்சியை எடிட்டிங்கில் பார்த்தது படம் ஹிட் எனச்சொன்னேன். தாணு சார் எனக்கு அப்பா மாதிரி. இந்த வெற்றியில் எல்லாருக்கும் பங்கிருந்தது என்றாலும்…அதில் தாணு சாருக்கு அதில் அதிக பங்குண்டு.
வெற்றிமாறன் படம் முடியுந்தறுவாயில் பெரும் சங்கடத்தில் இருந்தார். ஆனால் அதை அவர் வெளியில் காட்டவேயில்லை. நான் அந்த நேரத்தில் அவருக்காக கடவுளை வேண்டினேன். ராமர் என்ற பெயர் இருந்தும் எனக்கு விருது கிடைக்கவில்லை. இந்தப்படத்தின் இறுதி கட்டத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்
தேவிமணி பேசியதாவது,
“தேசியவிருது பெற்ற கலைஞர்களை பாராட்டும் மேடையில் என்னயும் ஒரு ஆளாக மேடையேற்றியதற்கு மகிழ்ச்சி கொள்கிறேன். என்னுடைய இந்த 50 வருட பத்திரிகையாளர் வாழ்க்கையில் இதுவொரு பொன்னாள். தாணு சார் பிரம்மாண்டத்தின் மறுபெயர். அவர் ரஜினியை வைத்து படம் எடுப்பேன் என்று சொன்னார். சொன்னது போலவே செய்தார். வெற்றிமாறன் நம் மண்ணின் அடையாளம்..அனைவருக்கும் வாழ்த்துக்கள் ” என்றார்
—