நடிகை ஹன்ஷிகா மோத்வானி வீட்டில் திருமணம்!

சென்னை.

நடிகை ஹன்ஷிகா மோத்வானி குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினர் இணைந்திருக்கிறார். அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி,  முஷ்கான்  உடன்  திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார். இவர்களின் திருமண நிகழ்வுகள் இருநாள் கொண்டாட்டமாக 2021 மார்ச் 20,21 தேதிகளில் உதய்பூரில் உள்ள Royal Retreat ல் நடைபெற்றது.

இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொண்டதாவது…

எங்கள் குடும்பத்தில் மிகப்பெரும் கொண்டாட்ட நிகழ்வு, வாழ்வின் மறக்க முடியாத தருணம், அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  என் குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினராக முஷ்கான் இணைந்துள்ளார். நாங்கள் தற்போது இணைபிரியா சகோதரிகள் ஆகிவிட்டோம். இரண்டு இனிய இதயங்கள் வாழ்வில் ஒன்றாக இணைந்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

திருமண விழா கொண்டாட்டங்கள் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்குகொள்ள ப்ரத்யேகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஹன்ஷிகா மோத்வானியின் தாயார் Dr. மோனா மோத்வானி, மற்றும் நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறவுகள் பங்கேற்றனர்.

திருமண நிகழ்வுகள் அனைத்தும்,  அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு, நடைபெற்றது.  இந்த 2 நாள் நிகழ்வு கோவிட் நெகட்டிவ் உள்ள, குறைவான நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள்  மட்டும் கலந்து கொள்ள எளிமையுடன் சிறப்பாக நடைபெற்றது.

 

 

Actress Hansika Motwani's brother Engagement News.Featured
Comments (0)
Add Comment