தனது 60-ஆவது படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்?

சென்னை.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 60-ஆவது படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருகின்றனர்.

விக்ரம் தனது மகன் துருவ்வை, தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும்  படத்தில் விக்ரம், துருவ் இருவருமே இணைந்து நடிக்கின்றனர்.

தந்தை, மகன் இருவரின் கதாபாத்திரங்களையும் படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம் தன் மகன் துருவ்வுக்கு வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

 

Actor Vikram News.Featured
Comments (0)
Add Comment