’ரூம்மேட்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் அப்படக்குழுவினர் உற்சாகம்!

 

சென்னை.

கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் மிக முக்கியமான துறையாக சினிமா துறை உள்ளது. அதிலும், மற்ற துறைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாலும், சினிமா துறை தற்போதும் பல பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்ப்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தத்தளிக்க, ‘ரூம்மேட்’ என்ற திரைப்படத்திற்கு  ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பால் தமிழ் திரையுலகே வியப்படைந்துள்ளது.

சிவசாய் நிறுவனம் சார்பில் இ.வினோத்குமார் தயாரித்திருக்கும் ‘ரூம்மேட்’ படத்தை அறிமுக இயக்குநர் வசந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ளார். புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இப்படம் மார்ச் 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை என்றாலும், ரசிகர்களின் மவுத் டாக் மூலம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

காதல் கதையை வித்தியாசமான முறையில் திரில்லர் ஜானரில் சொல்லப்பட்டிருக்கும் இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. எந்த ஒரு விளம்பரம் இன்றி, ஒரு சிறு முதலீட்டு திரைப்படம் இப்படி ஒரு வெற்றியை பெற்றிருப்பதை அறிந்த கோலிவுட்டின் மொத்த கவனமும் ‘ரூம்மேட்’ படம் மீது திரும்பியுள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தை காட்டிலும் ‘ரூம்மேட்’ படத்திற்கு ரசிகர்கள் அதிகமாக வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் ‘ரூம்மேட்’ படத்தை தங்களது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வித்தியாசமான திரைப்படங்களுக்கும், புது முயற்சிக்கும் ரசிகர்களின் ஆதரவு உண்டு, என்பதை பல தமிழ்த் திரைப்படங்கள் நிரூபித்துள்ளது. தற்போது, அப்படிப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ‘ரூம்மேட்’ படமும் இணைந்திருப்பது, படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது.

 

"Room Met" Movie newsFeatured
Comments (0)
Add Comment