கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர்!

சென்னை.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 ஆவது நினைவு தினத்தை போற்றும் விதமாக, கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு ஒரு அழகான மோஷன் டீஸரை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் அருண் சந்திரன் கூறியதாவது…

“செல்லப்பிள்ளை” படக்குழு சார்பாக எங்களின் மோஷன் போஸ்டரை மிகப்பெரும் வெற்றி பெற செய்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நம் தேசத்தின் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது நினைவு தினத்தை போற்றும் விதமாக,  அவருக்கான அர்ப்பணிப்பாக, எங்கள் சார்பில் ஒரு அருமையான காணொளியை உருவாக்கினோம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நம் தேசத்தின் தந்தை. அவரின் தியாகத்தையும், வீரத்தையும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேதாஜி குறித்து பேசிய “ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போருக்கு கூப்பிட்டப்போ, வீச்சறிவாளும் வேல்கம்புமா… கெளம்புன பயலுக நம்ம பயலுகதேன்” ( தமிழர்கள் ) எனும் வசனம் என்னை ஆழமாக பாதித்தது.

இந்த மோஷன் டீஸரில் நேதாஜி 1942 ல் துவங்கிய  இந்திய தேசிய ராணுவத்தின்,  ஜப்பான், ஆங்கிலம், சிங்கப்பூர் மற்றும் தமிழ் மொழியில் அமைந்துள்ள அடிக்கல்லை காட்டியுள்ளோம்.  இது நம் அனைவருக்கும் பெருமை. தமிழர்களுக்கும் நேதாஜிக்கும் உள்ள அசைக்க முடியாத உறவு, அவரது தீரத்தை இப்படத்திலும் இணைக்க வைத்துள்ளது. முழுக்க முழுக்க கொண்டாட்ட திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின், நடிகர் மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும் இப்படத்தினை SST Productions  சார்பில் தயாரிப்பாளர் ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப்  தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தீஷன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

FeaturedGautham Karthik’s Chellappillai news.
Comments (0)
Add Comment