விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதேபோல் பவித்ராவும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். புகழ் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் புதுமையான, மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கொண்ட படங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம். டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பு உள்ளது, அந்த வரிசையில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தங்களது அடுத்த 7-வது தயாரிப்பான புதிய படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் மற்றும் புகழ் முன்னணி பாத்திரத்தில் நடிக்கவிருக் கின்றனர். பிரபல நடிகை நாயகியாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விளம்பர பட இயக்குனராக பணியாற்றிய ஹரிஹரன், இந்த படத்தினை எழுதி, இயக்குகிறார். இப்படம் ரொமான்டிக், காமெடி படமாக உருவாகிறது. மே 2021 இறுதியில் படபிடிப்பு துவங்கப்பட்டு, முழுக்க, முழுக்க சென்னையில் படமாக்க படவுள்ளது.
படம் குறித்து டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R. ரவீந்திரன் கூறியதாவது….
டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் எப்பொழுதும் புது விதமான கதைகளை படமாக்க, ஆவலாக உள்ளோம். இயக்குனர் ஹரிஹரன், இந்த கதையை விவரிக்கும் போது காதல், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை அம்சங்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதை உணர முடிந்தது. இப்பொழுது தமிழகத்த்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளோர்க்கும் மிகப்பிடித்தவர்களாக மாறியுள்ள, அஸ்வின் மற்றும் புகழ் போன்ற சிறந்த கலைஞர்களை, ஒன்றாக இந்த படத்தில் கொண்டுவருவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். படபிடிப்பை மே மாத இறுதியில் தொடங்கவுள்ளோம். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரத்தை கூடிய விரைவில் அறிவிப்போம்.
படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியதாவது:
“இது முற்றிலும் காதலை மையமாக கொண்ட காமெடி படம். கதைக்கு அஸ்வின் பொருத்தமாக இருந்ததால் தயாரிப்பாளர் அவரை பரிந்துரைத்தார். இப்படத்திற்கு பின் புகழ், காமெடியில் தனக்கான இடத்தை பிடிப்பார். தற்போது நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. மே மாத இறுதியில் படப்பிடிப்பை துவக்க உள்ளோம்” என்றார். முதன்முறையாக சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ள அஸ்வின், எல்லாப் புகழும் இறைவனுக்கே என குறிப்பிட்டு ஒரு வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.