யூடியூப்பில் வெளியான ‘ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம்!

சென்னை.

‘காதல்’.. அன்றும், இன்றும், என்றும் சினிமாவுக்கான சிறப்பான, புதிதான கதைக்களம். அப்படிப்பட்ட காதலை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ என்ற குறும்படம்.
சினிமா திரையரங்குகள் கரோனா காலத்தில் கனவாகிவிட்ட நிலையில், பல இளம் படைப்பாளிகளின் கைக்கு எட்டிய களமாகியுள்ளது யூடியூப்.
ஊரடங்கில் யூடியூப் இளைஞர்களின் அபிமானத்தை பல்லாயிரம் மடங்கு அதிகம் பெற்றிருக்கும் நிலையில் ‘ஏனென்றால் காதல் என்பேன் குறும்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் விஜய் தங்கையன் கூறும்போது, ‘ஏனென்றால் காதல் என்பேன்’ நவயுக காதலர்களின் உணர்வுகளை மெலிதான நகைச்சுவையுடன் படமாக்கியிருக்கும் குறும்படம். அதுமட்டுமல்லாமல், மிக மென்மையான காதலெனும் உணர்வை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறோம். அதற்காக கதாபாத்திரங்களை வலுவானதாகக் கட்டமைத்துள்ளோம். இந்தக் குறும்படத்தில் பவித்ரா லக்‌ஷ்மி நாயகியாக நடித்துள்ளார். இவரை தனியார் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி சமையல் கலை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் அறிந்திருக்கின்றனர்.
நாயகனாக நான்  நடித்திருக்கிறேன் என்றார்.

இந்த குறும் படத்திற்கு காதல் கசியும் இசை கொடுத்திருக்கிறார் திவாகரா தியாகராஜன். காதலைப் படமாக்க அழகியல் பார்வை வேண்டும். அழகியல் ததும்ப அதை கனகச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறார் வினோத் ராஜேந்திரன். இந்தப் படத்தின் நாயகன் விஜய் தங்கையன் தான் இயக்குநரும் கூட. இந்தக் குறும்படத்தை சில்வர் ஃபாக்ஸ் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது. கிளிக்ஸ் அண்ட் ரஷ்  புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணை தயாரிப்புப் பணியை மேற்கொண்டிருக்கிறது. கவுதம் ராஜேந்தர் எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார். கலை வடிவமைப்பு மார்டின் டைடஸ் செய்திருக்கிறார். பாடல் வரிகள் கொடுத்திருக்கிறார் ஏகே. படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் இம்ரான் அலி கான். பிஆர்ஓ யுவராஜ். ஸ்டில்ஸ் தீபக் துரை. விஎஃப்எக்ஸ் பணிகளை நரேன் மற்றும் பிக்செல் ஃபேக்டரி மேற்கொண்டனர். ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தை புஷ்பலதா, சஜிதா மற்றும் சோனால் ஜெயின் ஆகீயோர் செய்திருக்கின்றனர்” என்றார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் மனங்களில் மகிழ்ச்சியைக் கடத்த யூடியூபில் வெளியாகியிருக்கிறது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம்.

"Enenraal Kadhal Enpen" Short Film News.Featured
Comments (0)
Add Comment