தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படம!

சென்னை.

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்  எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர் .தற்போது தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில்  தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் .வணிகரீதியான வெற்றிகளின்  படங்களை இயக்குவதில் கம்முலா ஒரு மாஸ்டர்.

இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும்.இப்படத்தை நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின்  தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4 ) மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது .

மறைந்த திருமதி .சுனிதா நாரங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்ட திரைப்படத்தை சோனாலி நாரங் வழங்குகிறார்.இதர தொழில்நுட்ப மற்றும் கதாபாத்திர தேர்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் . இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள் .

நடிகர்: தனுஷ்
இயக்குனர்: சேகர் கம்முலா
வழங்குபவர் : சோனாலி நாரங்
தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி
தயாரிப்பாளர்கள்: நாராயண் தாஸ் கே நாரங் & புஸ்கூர் ராம் மோகன் ராவ்

 

Actor Thanush New Movie News.Featured
Comments (0)
Add Comment