கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் பாராட்டிய தமிழ்ப்படம் “அட்ரஸ்”

சென்னை.

இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான “அட்ரஸ்” திரைப்படத்தின் டீஸர் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட  சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்கள் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தின்  டீஸரை பகிர்ந்ததோடு, படத்தை பாராட்டி வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார்.

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் கூறியதாவது…

இயக்குநர் இராஜமோகன்  எனது நீண்ட கால நண்பர் சமீபத்தில் அவரை சந்தித்தபோது, அவரின் “அட்ரஸ்” படம் குறித்து கேளிப்பட்டேன். கதையின் மையமே மிக வித்தியாசமாக இருந்தது. படத்தின் டீஸரை எனக்கு காட்டினார். டீஸர் மிக அற்புதமாக இருந்தது. படத்தின் டைட்டிலே கதை சொல்வதாக இருந்தது. இந்தப்படம் ஒரு மாற்றத்தை தரும் மக்களின் படைப்பாக இருக்கும். காட்சிகள் எல்லாம் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது. அதர்வா நன்றாக நடித்திருந்தார். இந்தக்குழு கடுமையாக உழைத்திருப்பது டீஸரிலேயே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றிபெற எனது வாழ்த்துகள் என்றார்.

இது குறித்து இயக்குநர் இராஜமோகன் பகிந்துகொண்டதாவது..

நான் விஜய் மில்டன் அவர்களிடம் பல காலமாக உதவியாளராக வேலை பார்த்தவன். திரையுலகில் அவர் தான் என் குரு. இயக்குநராக மாறிய பின்னரும் அவர் அழைக்கும் பொது அவர் படங்களில் வேலை பார்ப்பேன். விஜய் மில்டன் சார் இப்போது கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்களை வைத்து, படம் இயக்கி கொண்டிருக்கிறார். அதில் நானும் வேலை பார்த்தேன். எனக்கு சிவராஜ்குமார் அவர்களை முன்பிருந்தே தெரியும் அவர் என்னை குறித்து விசாரித்த போது, என் படத்தின் டீஸரை காட்டினேன். ஆச்சர்யப்பட்டு படத்தை குறித்து அனைத்து விசயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். என்னை வெகுவாக பாராடியதோடு படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடத்திலும் இந்த படம் குறித்து பாரட்டி பேசினார். ஒரு சூப்பர் ஸ்டார் இவ்வளவு மெனக்கெடலுடன் அனைவர் முன்னிலையிலும் பாரட்டியதுபெரும் மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அவர் அத்தோடு நில்லாமல் டீஸை கேட்டு வாங்கி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார் மேலும் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி ஒரு வீடியோ பதிவு செய்து இதை வெளியிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். மிக உச்சத்தில் இருக்கும் நடிகர், எங்கள் படத்தை இந்தளவு பாராட்டியது ,மிகப்பெரும் மகிழ்ச்சியையும், உற்சாக்த்தையும் தந்துள்ளது. அட்ரஸ் படத்தின் டீஸருக்கு ரசிகர்களிடமிருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஜனரஞ்சகமான படைப்பாக இருக்கும் என்றார்.

மொழி வாரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக கேரளா எல்லைக்களுக்கிடையில் சிக்கிகொண்டு அட்ரஸ் இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதை தான் இந்த “அட்ரஸ்” திரைப்படம்  இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் இப்படத்தினை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கிறார்.

"Address" Movie News.Featured
Comments (0)
Add Comment