நடிகரும், இயக்குனருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம் இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.
‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இப்பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
Prabhu Deva and Santhosh P Jayakumar’s untitled film to go on floors today!
Actor, director Santhosh P Jayakumar’s next film has commenced with a pooja Work on the film, which features actor Prabhu Deva in the lead, began with a simple pooja in Chennai today.
Directed by Santhosh P Jayakumar, who has directed films like Hara Hara Mahadevaki, Iruttu Araiyil Murattu Kuthu, Ghajinikanth and Irandam Kuthu, this untitled film will be an action entertainer and will feature actresses Varalakshmi Sarathkumar and Raiza Wilson as the female leads.
Cinematography will be by Ballu and music for the film will be by D Imman. This untitled film, being made on a lavish scale, is being produced by S Vinothkumar on behalf of Mini Studio.