ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சரித்திர சாதனை படைத்த இசை ஞானி இளையராஜாவை, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இன்று சந்தித்தனர்.
அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெக்கார்டிங் ஸ்டுடியோவை சுற்றிக் காண்பித்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வாழ்த்துமடல் வழங்கி, முக்கனிகளான மா பலா வாழை செடிகளைகளை வழங்கினர். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க தலைவர் கவிதா, சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்ற தொடர் முயற்சியால், இன்று இசைஞானி இளையராஜாவும் சந்திக்க நேரம் ஒதுக்கினார். சங்கத்தில் உள்ள அனைவரும் புதிய ஸ்டுடியோவை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.. ஒவ்வொருவருடனும் இசைஞானி இளையராஜா பெருந்தன்மையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இசையோடு உபசரித்து அனுப்பியது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் இசைஞானி இளையராஜாவுக்கும்…மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு மற்றும் மேலாளர் ஸ்ரீராம் ஆகியோருக்கு நன்றி கூறினர்.