சென்னை.
‘சூரரைப்போற்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது நவரசா வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் அவர், கவுதம் மேனன் இயக்கி உள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் சூர்யா.நடிகர் சூர்யா, ஜூலை 23ம் தேதி நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில், அவரது புதிய படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு சூர்யா பிறந்தநாளன்று வெளியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகர் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர். இதுவரை சூர்யா 40 என்று அழைத்து வந்த இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.இதற்குமுன் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமார் இரட்டை வேடத்தில் நடித்த படம் 1976 ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது.