சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘அரண்மனை-3’ படத்தின் மூன்றாவது பாடல்!

சென்னை.

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் மூன்றாவது பாடல்லொஜ்ஜக்கு மொஜ்ஜக்குவெளியானது !

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3  திரைப்படம்  உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. அவ்னி  சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா  இசையமைக்கிறார் .

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இரு பாடல்கள்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் , மூன்றாவது  பாடலான ‘லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு’  இன்று வெளியாகி உள்ளது .  பாடகர் முகேஷ் இந்த பாடலை பாடியுள்ளார் .மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் .

தொழில்நுட்ப கலைஞர்கள்:

யக்கம்  : சுந்தர் .சி
தயாரிப்பு நிறுவனம் : அவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்,தளபதி தினேஷ் ,பிரதீப் தினேஷ்
நடனம்:பிருந்தா,தினேஷ்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்

"Aranmanai-3" Movie News.Featured
Comments (0)
Add Comment