சென்னை இளைஞன் ஹாலிவுட் படத்தில் கதா நாயகனாக அறிமுகம்! தமிழிலும் நடிக்க ஆசை!

சென்னை

சென்னை இளைஞன் எபின் ஆன்டனி ஆங்கில படத்தில் கதாநாயகனாக அறிமுகாகியுள்ளார் .  சமீபத்தில் அமெரிக்காவில் ஆமேசன் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியான டேனில் ரான்சம் கதை எழுதி இயக்கிய ” ஸ்போக்கன் “(Spoken) என்ற ஹாரர் படத்தில் தான் இவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.  இதில் கதா நாயகியயை துரத்தி காதலிக்கும் இசை கலைஞனாக நடித்துள்ளார்.

சென்னையில் வளர்ந்த இவருக்கு சினிமா நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தினால் கல்லூரியில் படிக்கும் போதே  நூறுக்கும் மேற்பட்ட தமிழ் , ஆங்கில படங்களுக்கும் கார்ட்டூன் படங்களுக்கும் குரல் கொடுத்து வந்தார் . அதுவே இவருக்கு சினிமாவில் பிரவேசிக்க முதல் படியாக அமைத்தது. அமெரிக்காவில் மேல் படிப்புக்கு சென்றவர், தன் நடிப்பு திறனை அதிகரிக்க , லாஸ் ஏஞ்சல்சிலுள்ள நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் நடிப்பு கற்று கொண்டார்.

தற்சமயம் லியானார்டோ டிகாப்ரியோ போன்ற ஆஸ்கார், எமி விருது பெற்ற பிரபலங்களின் ஆக்டிங் கோச் லாரி மோஸ், டிம் பிலிப்ஸ் ஆகியோரிடமும் நடிப்பு கற்று வருகிறார். எபின் நடித்த இரண்டாவது ஆங்கில படம் , டாம் லெவினின் ‘ பார்ட்டி ‘ என்ற நாவலை தழுவி கெவின் ஸ்டீவன்சன் இயக்கிய ‘ பட்டர் ஃப்ளைஸ் ‘ இந்த வருடம் வெளிவர உள்ளது. ஹாலிவுட் படங்களின் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வரும் வேளையில்  தனக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பது தான்  ஆசையும் லட்சியமும் என்கிறார் எபின் ஆன்டனி.

 

 

-Chennai's Ebin Antony makes his Hollywood debut NEWS.Featured
Comments (0)
Add Comment