இரண்டு விருதுகளைத் தந்து கவுரவித்த சைமாவுக்கு நன்றி! ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை.

இரண்டு விருதுகளைத் தந்து கவுரவித்த சைமாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. 2019, 2020ஆம் ஆண்டுகளுக்கான சைமா விருது விழா ஹைதாராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

தமிழில் வெளியான க/பெ.ரணசிங்கம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த இந்தத் திரைப்படம் கரோனா ஊரடங்கு காரணமாக ஓடிடியில் வெளியானது. மிகவும் உருக்கமான, நெகிழ்ச்சியான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இத்திரைப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்துக்காக விமர்சகர்கள் தேர்வாக சிறந்த நடிகை விருதைப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் இயக்குனர் க்ரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராஷி கண்ணா நடித்துள்ள தெலுங்கு  திரைப்படம். காதல் திரைப்படமான இது விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தத் திரைப்படத்திற்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது. ஒரே விழா மேடையில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளதால் சைமா விருதுக் குழுவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

 

FeaturedTwo Awards win Iswarya Rajesh
Comments (0)
Add Comment