12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல வில்லன் நடிகர்!

சென்னை.

நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் ரஜினியுடன் நடித்து வருகிறேன், சூர்யாவுடன் நடித்து வருகிறேன், விஜய்யுடன் நடிக்கவுள்ளேன்’ என்று கூறியிருக்கிறார். விஜய்யின் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் பேசுவதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏற்கனவே பிரகாஷ் ராஜ், விஜய்யுடன் இணைந்து ‘கில்லி’, ’போக்கிரி’, ’ஆதி’, ’சிவகாசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ’வில்லு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரகாஷ்ராஜ் அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

'Thalapathy 66' Movie NewsFeatured
Comments (0)
Add Comment