தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற முனைவர் ஐசரி கணேஷ்!

சென்னை.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் இந்த முறை இச் சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஐசரி கணேஷ் அவர்கள் ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

15 ஆண்டுகளுக்கு மேல் ஐசரி கணேஷ் அவர்கள் இச் சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்து வருவதும், தினத்தந்தி நாளிதழ் நிறுவனரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான பா.சிவந்தி ஆதித்தன் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது

 

 

FeaturedVel's Isari ganesh News
Comments (0)
Add Comment