தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இதில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பக்குழு :
இயக்கம் : செல்வராகவன்
தயாரிப்பு : V கிரியேஷன்ஸ் – கலைப்புலி S தாணு
படத்தொகுப்பு : புவன் ஸ்ரீனிவாசன்
ஒளிப்பதிவு : யாமினி யக்ன மூர்த்தி
தயாரிப்பு மேற்பார்வை : S வெங்கடேசன்
ஆடை வடிவமைப்பு : காவ்யா ஸ்ரீராம்
ஒப்பனை : நெல்லை V சண்முகம்
நிழற்படம் : தேனி முருகன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்