சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

சென்னை.

நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை நேற்று (அக்டோபர் 25) குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்யா நாயுடுவிடம் பெற்றுக் கொண்டார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்தற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ‘சூப்பர் டீலக்ஸ்’ தியாகராஜா குமாரராஜாவால் இயக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்னொரு மைல்கல்லாக இருந்தது. இந்நிலையில் தான் இப்படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றுள்ளார்.

இப்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், இந்தி படங்கள், வெப்சீரிஸ் என பிஸியாகவே இருக்கிறார். தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், இந்தியில் மும்பைகர், ராஜ் அண்ட் டிகே இயக்கும் வெப் சீரிஸ்  உள்ளிட்ட பல ப்ராஜக்டகளிலும் பரபரப்பாக இருக்கிறார்.

 

Actor Vijayasethupathi news.Featured
Comments (0)
Add Comment