அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சி எஸ் கே அணி கேப்டன் தல தோனி!

சென்னை.

அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அழகு சாதனவியல் ஹேர் ஸ்டைல் சலூன் (Cosmetology Hair style & Medi Saloon) என்று அழைக்கப்படும், இங்கு தலை முடி, நகம், தோல், இமை உள்ளிட்ட அனைத்திற்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு சரிசெய்யப்படும். டாக்டர் நிஷா மற்றும் அப்பு ஆகியோர் அன்லான் ஆர்ட் சலூனின் நிறுவனர்கள்.

இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன், சி எஸ் கே அணி கேப்டன் தோனி ஆகியோர் அன்லான் ஆர்ட் சலூனை திறந்து வைத்து அறிமுகப்படுத்தினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஐஷரி கணேஷ், கலா மாஸ்டர், நடிகர்கள் விக்ரம் பிரபு, கலையரசன், ஓவியர் மற்றும் நடிகர் ஏ.பி.ஶ்ரீதர், பிக்பாஸ் ஷாரிக், பிக்பாஸ் நமீதா மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்த தல தோனி, அதன் பின் அங்கு வந்திருந்த சிறுவர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Anlon Art Saloon Dhoni Launch Event news.Featured
Comments (0)
Add Comment