எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்!

சென்னை.

எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். கதையின் நாயகனாக எஸ்.எஸ்.பிரபு அறிமுகமாகிறார்.

அமெரிக்காவில் ஆங்கிலப்படம் மற்றும் டெலி பிலிம்களை இயக்கிய கிரிதரன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

ஸ்டண்ட் – எஸ்.ஆர்.ஹரிமுருகன், நடன இயக்குனர் – சங்கர், காஸ்டிங் இயக்குனர் – ஆரோக்கியதாஸ், காஸ்ட்யும் டிசைனர் – ரெபேகா மரியா, நிர்வாக தயாரிப்பாளர் – ஆர்.குமரேசன், கே.எஸ்.செந்தில் குமார், மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன் – சதீஷ்வரன்

 

FeaturedFour Heroiens acted new movie
Comments (0)
Add Comment