சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை:

ரஜினி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் மட்டுமின்றி உலக தமிழர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினிக்கு இன்று 72-வது பிறந்தநாள் ஆகும்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு ரிஷிகேஷிற்க்கு சென்று மகான்களை சந்தித்து ஆசி பெறுவதை ரஜினி முன்பு வழக்கத்தில் வைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் தனது பண்ணை வீட்டுக்கு சென்று பிறந்த நாள் கொண்டாடுவதை வழக்கத்தில் வைத்துள்ளார். வழக்கம் போல இந்த ஆண்டும் ரஜினி தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று காலை பிறந்தநாளை கொண்டாடினார்.  அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   இன்று பிறந்தநாள் காணும்  ரஜினிக்கு பிரதமர் மோடியும்,  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

இன்று  பிறந்த நாள் காணும் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் ரஜினிகாந்த் வாழ கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது வயதில் இன்று அடியெத்து வைத்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் ‘‘உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும்  நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்களும்  கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு இன்று பிறந்த நாள். 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி பிறந்த ரஜினிகாந்த், இன்று 71 வயது முடிவடைந்து 72-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் நள்ளிரவு 12 மணியளில் இருந்து போயன்ஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன் குவிந்தனர். அப்போது தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து என உற்சாகத்துடன் கேக் வெட்டினர்.

 

FeaturedSuper Star Rajinikanth News.
Comments (0)
Add Comment