‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ரசிகர்களின் இதயத்திற்கு நெருக்கமான படைப்பாக இருக்கும் – இயக்குநர் நந்தா பெரியசாமி!

சென்னை.

இயக்குனர் நந்தா பெரியசாமியின் “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்  வெளியாகி இருக்கிறது. படம் மிக நன்றாக வந்திருப்பதிலும்,  படம் உறுதியாக ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.

இயக்குநர் நந்தா பெரியசாமி கூறியதாவது..,

“தயாரிப்பாளர் ரங்கநாதன் சார் ஆதரவு இல்லையென்றால் இந்தப் படம் வெறும் திரைக்கதை வடிவமாகவே பேப்பர்களில் இருந்திருக்கும். நான் முதன்முதலில் அவரை அணுகி, படம் பற்றிய ஒரு சிறிய கதை சுருக்கத்தை அவரிடம் சொன்னவுடனேயே, அவர் உடனடியாக அதைத் தயாரிக்க ஒப்புக்கொண்டார். கூட்டுக் குடும்பத்தின் மதிப்பையும் உணர்வுகளையும் நன்கு அறிந்த ஒருவரால் மட்டுமே, இது சாத்தியமாகும். குடும்பக் கதைகள் உலகளாவிய அளவில்,  ரசிகர்களுக்கு எப்போதும் மிகப்பிடித்திருந்தாலும், பல தயாரிப்பாளர்கள் இம்மாதிரியான படங்களில் முதலீடு செய்வதே இல்லை. மேலும், பல தயாரிப்பாளர்கள் எப்போதுமே  பாதுகாப்பாகா வெற்றிபெறும் படங்களையே தயாரிக்க விரும்புகிறார்கள். இதன் மூலம் சர்ச்சைக்குரிய  மற்றும்  மிகவும் அழுத்தமான கருப்பொருள்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குகிறார்கள், ஆனால் விதிவிலக்காக இந்த குடும்பகதை மீது P.ரங்கநாதன் முழுமையான நம்பிக்கை வைத்தார். இப்படத்தின் இறுதிப்பதிப்பை  பார்த்த பிறகு, படத்தின் உருவாக்கத்தை மிகவும் பாராட்டினார், ஆனால் உண்மை என்னவென்றால், படத்தின்  மேஜிக்கின் பின்னணியில் இருப்பவர் அவர்தான்.

படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்தது குறித்து,  பெரியசாமி கூறும்போது, “தமிழ் மண்மனத்தை பிரதிபலிக்கும் நட்சத்திரங்களை நடிக்க வைக்கவே நான் விரும்பினேன். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும்  ஒரு அற்புதமான உறவுப்பிணைப்பை உண்டாகிவிட்டது. கவுதம் கார்த்திக் ஒரு அழகான மற்றும் இளமை ததும்பும் நடிகர், அவர் நம் பக்கத்து வீட்டு பையன் போன்று எளிதில் கவரக்கூடியவர். நாயகி  ஷிவாத்மிகா ராஜசேகர் மிக அழகான தமிழ்ப் பெண்ணாக இருக்கிறார், இப்படத்தில்  அவர் சிறப்பாக நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையில், சேரன் சார்  எல்லோரிடத்திலும் அக்கறையுள்ள குணம் கொண்டவர் மற்றும் எப்போதும் அனைவரிடத்திலும்  ஒரு இனிமையான சகோதரராகப் பழகுபவர். இந்த பாத்திரத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். சித்து குமாரின் பாடல்கள் இந்தப் படத்தின் உணர்வுகளின் ஆழத்தை வெளிப்படுத்தும்படி அமைந்துள்ளது. அவர் ஒரு திறமையான இசைக்கலைஞர், அவர் தனது உண்மையான அர்ப்பணிப்பிற்காக விரைவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக போற்றப்படுவார். “ஆனந்தம் விளையாடும் வீடு”  ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை Sri Vaari Film  சார்பில் P.ரங்கநாதன் தயாரித்துள்ளார். கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி, “நமோ” நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி, “நக்கலைட்” செல்லா “சூப்பர்குட்” சுப்ரமணி “V.J. கதிரவன், மௌனிகா, மைனா,சூசன், பிரியங்கா, மதுமிதா, “பருத்திவீரன்” சுஜாதா, “நக்கலைட்” தனம், ஜானகி, வெண்பா, சுபாதினி, சிந்துஜா மற்றும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

" Anandham Vilayadum Veedu - Director Nanda Periyasamy" NewsFeatured
Comments (0)
Add Comment