DBK இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பி.லிட் கம்பெனி சார்பில் டில்லிபாபு.K தயாரிக்கும் படம் “டைட்டில்”

சென்னை.

DBK இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பி.லிட் கம்பெனி சார்பில் டில்லிபாபு.K அவர்கள் தயாரிக்கும் படம் “டைட்டில்” விவசாய நிலங்களை NRI மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, விவசாயிகளுக்கு ஆசைகாட்டி விவசாயிகளிடம் இருந்து எந்த இடைஞ்சலும், பிரச்சனைகளும் இல்லாமல் நிலங்களை வாங்கிக் கொடுக்கும் கும்பலுக்கும் விவசாயத்தை மேன்மையாகவும், மண்ணை தெய்வமாகவும் நினைக்கும் குடும்பத்திற்கும் நடக்கும் பிரச்சனைகள், அவர்களின் நிலங்களை பறிக்க போடும் திட்டங்கள், அவற்றையெல்லாம் எப்படி முறியடித்து நிலத்தை காக்கின்றனர் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து கதை சொல்லப்பட்டிருக்கிறது.

விவசாயத்தில் விறுப்பம் இல்லாத இளைஞனாக விஜித் கதாநாயகனாக நடித்திருக்கிறார் அஸ்வினி சந்திரசேகர் நாயகியாகவும் NRI ஏஜென்டாக மைம் கோபி மற்றும் மாரிமுத்து நடித்திருக்கிறார்கள் மற்றும் ரோபோ சங்கர், மதுமிதா, பிளாக் பாண்டி, ரேகா, கூல் சுரேஷ் நடிக்க, எழுதி இயக்கியிருக்கிறார் – ரகோத் விஜய், ஒளிப்பதிவு – SM தங்கபாண்டியன், இசை – அனல் ஆகாஷ், எடிட்டிங்க் – விது.ஜீவா, பாடல்கள் – லோகன், கலை – ஐயப்பன், ஸ்டன்ட் – மிரட்டல் செல்வா, நடனம் – ராபர்ட் ராக், தயாரிப்பு மேற்பார்வை- வேல்மணி, தயாரிப்பு – டில்லிபாபு. K, படம் டிசம்பர் மாதம் திரையிட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடக்கிறது.

"Title" Movie News.Featured
Comments (0)
Add Comment