எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகி யுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பைக் கொண்டாடும் பாடலான ‘தோழி’ மிகவும் அழகாக உருவாகியுள்ளது.
மதன் கார்க்கியின் மந்திர வரிகளில், கோவிந்த் வசந்தாவின் ஆத்மார்த்தமான இசையமைப்பில், பிரதீப் குமாரின் இனிமையான குரலுடன் உருவாகியுள்ள இந்த பாடல் மெல்லிசை மற்றும் உணர்ச்சிகளின் கொண்டாட்டமாக உள்ளது. பாடலை பற்றி பிருந்தா மாஸ்டர் கூறுகையில், “ஹே சினாமிகா படத்தின் ‘அச்சமில்லை’ பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால், ‘தோழி’ உங்களை உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். இந்த பாடல் மிகவும் அழகாக உருவெடுத்துள்ளது. கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. துல்கர் மற்றும் காஜல் மிகவும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். நட்புக்கான இந்த இதயப்பூர்வமான இசை அஞ்சலியுடன் ரசிகர்கள் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கூறுகையில், “இந்தப் படத்தில் மட்டுமல்ல, என்னுடைய கேரியரிலும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று ‘தோழி’. படப்பிடிப்பிற்கு 6 மாதங்களுக்கு முன்பு பிருந்தா மாஸ்டரைச் சந்தித்தபோது, ஒரு நல்ல மெலடியை விரும்புவதாக சொன்னார். இந்த பாடலை அவர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் அருமை. பிரதீப் குமார் இப்பாடலை மிக அழகாகப் பாடியிருக்கிறார்,” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறும்போது, “பனித்துளி போல தூய்மையான, அழகான நட்பின் பாடல் தான் ‘தோழி’. இதை கேட்பவர்கள் ஆழமான நட்பை அனுபவிக்க முடியும்,” என்றார்.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ 25 பிப்ரவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
ஒளிப்பதிவு: பிரீத்தா ஜெயராமன் ஐ எஸ் சி
இசை: கோவிந்த் வசந்தா
படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்
எழுத்து & பாடல்கள்: மதன் கார்க்கி
கலை இயக்கம்: எஸ் எஸ் மூர்த்தி / செந்தில் ராகவன்
சண்டை பயிற்சி: அஷோக்
நிர்வாக தயாரிப்பு: ஃபிராங்க் மைக்கேல்/ரஞ்சனி ரமேஷ்/எஸ் பிரேம்
இணை தயாரிப்பு: குளோபல் ஒன் ஸ்டூடியோஸ்
தயாரிப்பு: ஜியோ ஸ்டூடியோஸ்
இயக்கம்: பிருந்தா