சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவரவுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘மகான்’

சென்னை.

‘மகான்’ -தமிழ் ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லரை Prime Video இன்று வெளியிட்டது, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையிடப்படவுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லரில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகிய பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேர்மையான, கொள்கை பிடிப்பு கொண்ட வாழ்க்கையிலிருந்து விலகியதால், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட ஓர் எளிய மனிதனின் கதையில் இந்த டிரெய்லர் நம்மை அழைத்துச் செல்கிறது. அவர் தனது லட்சியங்களை எட்ட தனித்து முன்னேறுகிறார். அதில் அவர் வெற்றியின் உச்சத்தை அடைந்தாலும், அவர் தனது மகன் தன்னுடன் இல்லாத இழப்பை உணர்ந்து, அவரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள், மாற்றங்கள், ஏற்ற தாழ்வுகளை இப்படம் சித்தரிக்கிறது.

“திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் முழு முயற்சியுடன் ஒத்துழைத்து, ஆதரவு தந்ததின் விளைவாக உருவான ‘மகான் =’ முழுமையான அன்பின் வெளிப்பாடு” என்று படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறினார். “விக்ரமுடன் பணிபுரிவது மகிழ்ச்சியான ஒன்று, மேலும் ‘மகான்’ திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையில் 60-வது படம் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. ‘சீயான்’ விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் என தந்தையையும், மகனையும் ஒன்றாக இப்படத்தில், முதன் முதலாக இயக்கும் வாய்ப்பையும் இந்தத் திரைப்படம் எனக்கு அளித்துள்ளது. இருவரும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிக்கொணரந்துள்ள இப்படம், ரசிகர்களும், பார்வையாளர்களும் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். Amazon Prime Video மூலம் உலகெங்கும் திரையிடப்படும் ‘மகான்’ பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சீயான் விக்ரம் கூறுகையில்,

“மகான் திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆக்‌ஷன் மற்றும் டிராமாவின் சரியான கலவையைக் கொண்டிருக்கும். இந்தத் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பல சாயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு சாயலும் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. என்னுடைய 60வது படமாக எனது சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதால், இது எனக்கு மிக முக்கியமான படமாகும், இரண்டாவதாக எனது மகன் துருவ் விக்ரம் இபடத்தில் எனது மகனாக நடிக்கிறார். இந்தப் பாத்திரத்திற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார், அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாகச் சித்தரிக்க முழுமையான உழைப்பை அளிக்கும் கார்த்திக் சுப்பராஜ் போன்ற திறமையான இயக்குநருடன் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகிறது. பிப்ரவரி 10 அன்று ‘மகான்/ Prime Video மூலம் உலகெங்கும் சென்றடைய உள்ளார். அதுவே எனது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.” என்கிறார்.

துருவ் விக்ரம்   கூறுகையில்,

“மகான் எனக்கு முக்கியமான திரைப்படம் என்பேன். ஏனென்றால் நான் என் தந்தையுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை, அதுவும் அவரது மகனாகவே இதில் நடித்துள்ளேன். அவர் மிகவும் திறமையான மனிதர், மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய சிறந்த புரிதலைக் கொண்டவர், அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது,”என்று துருவ் விக்ரம் கூறினார். அவர் மேலும் கூறுகையில் “கார்த்திக் சுப்புராஜ் சாரின் இயக்கத்தில் பணிபுரிவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, என் கதாபாத்திரத்தின் நுணுக்கங்களையும் தீவிரத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவினார். எனது நடிப்பையும் படத்தையும் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.PrimeVideo,   மூலம்  உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ‘மகான், திரைப்படத்தைக் காணமுடியும் என்பது மேலும் சிறப்பான ஒன்று.” என்கிறார்.

 

 

 

"Mahaan" to Premiere Worldwide on Prime Video on 10 February Rlse.Featured
Comments (0)
Add Comment