ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் “ரஜினி”

சென்னை.

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம்  “ரஜினி ”  இந்த படத்தை A.வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் ‘சாக்லேட்’, ‘பகவதி’, ‘ஏய்’, ‘வாத்தியார்’, ‘மாஞ்சா வேலு’, ‘மலை மலை’, ‘கில்லாடி’ போன்ற வெற்றிப்  படங்களை இயக்கியவர்.

இப்படத்தில் விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது…

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள்  நடைபெற்று வருகிறது.  திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான  படமாக இதை உருவாக்கி  உள்ளேன். ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இது அவருடைய கதை இல்லை நாயாகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார் அதனால் தான் படத்திற்கு ரஜினி என்று தலைப்பை வைத்துள்ளோம். ரஜினி ரசிகரான விஜய் சத்யா,  தனது வாழ்வில் எதிர்பாராத விதமாக  ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். அதனால் என்ன மாதிரியான சிக்கல்கள் வருகிறது  அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாக்கியுள்ளோம்.

விஜய் சத்யாவிற்கு இந்த படத்திற்கு பிறகு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ” துரு துரு கண்கள் ”  பாடலை  சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அந்த பாடல் நிச்சயமாக  மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகமொத்தம் ‘ரஜினி’  இந்த வருடத்தின் மிக சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும்…என்றார் இயக்குனர் A.வெங்கடேஷ்.

படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட தயாரிப்பாளர் V.பழனிவேல்  திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு – மனோ V.நாராயணா, கலை – ஆண்டனி பீட்டர், நடனம் – செந்தாமரை, எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல், புரொடக்ஷன் கண்ட்ரோளர் – பூமதி – அருண், மக்கள் தொடர்பு – மணவை புவன்,  இணை தயாரிப்பு – கோவை பாலசுப்ரமணியம், தயாரிப்பு  – V.பழனிவேல்,திரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்.

 

 

FeaturedRajini Movie News
Comments (0)
Add Comment