மஞ்சிமா மோகனை காதலிப்பதை உறுதி செய்த கவுதம் கார்த்திக்

சென்னை.

‘கடல்’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த கவுதம் கார்த்திக், தான் காதலிப்பதை உறுதி செய்திருக்கிறார்.

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘வைராஜா வை’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’, ‘ஹரஹர மகாதேவகி’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ‘யுத்தசத்தம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் ‘தேவராட்டம்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகன்  நடித்தபோது, அவரிடம் கவுதம் கார்த்திக் மனம் விட்டு பேசினார். அப்போதுதான்  அதைக் கண்ட சிலர் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகனை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கிசுகிசு செய்திகள் வந்தன.

ஏற்கனவே இதற்கு இதுவரை இருவரும் விளக்கம் சொல்லவில்லை, மஞ்சிமா மோகன் தமிழில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘இப்படை வெல்லும்’, ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மஞ்சிமா மோகன் பிறந்த நாளையொட்டி வலைத்தளத்தில் அவரது புகைப்படத்தை பகிர்ந்து கவுதம் கார்த்திக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உன்னைப்போன்ற ஒரு பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் மஞ்சிமா மோகனுடனான காதலை கவுதம் கார்த்திக் உறுதிப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டு இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Actor Gowtham Karthick News.Featured
Comments (0)
Add Comment