“வஞ்சம் தீர்த்தாயடா” படத்திற்காக வருங்கால சூப்பர்ஸ்டாரை தேடும் இயக்குனர் சுசி கணேசன்

சென்னை.

“வஞ்சம் தீர்த்தாயடா“ படத்திற்காக நடக்கும் ” வருங்கால சூப்பர் ஸ்டார்” ஷோவில் பங்கேற்கும் அடுத்த கட்ட போட்டியாளர்கள் 540 பேருக்கு சுசி கணேசன் நடத்தும் வித்தியாசமான போட்டி.

‘விரும்புகிறேன்’ ‘பைவ் ஸ்டார்’,’திருட்டுப்பயலே’, ‘கந்தசாமி’ உட்பட தான் இயக்கிய ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமான கதைக்களத்தில் கொடுத்து தனது தனித்துவத்தை நிரூபித்தவர் இயக்குநர் சுசி கணேசன். தற்போது அடுத்ததாக தான் இயக்குகின்ற ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படம் மூலம், “80 – களில் மதுரை “யை மைய்யமாக வைத்து ஆக்‌ஷன் டிராமா தளத்தில் களமிறங்கியுள்ளார்.  இந்த படத்தில் 2 கதாநாயகர்களில் ஒருவரை கண்டறியும் புதிய முயற்சியாக ‘வருங்கால சூப்பர்ஸ்டார் 2022’ என்கிற ஷோ அறிவிப்பானது, திரையுலகில் நுழைந்து நடிப்பில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இதன்படி நடிப்பில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் தங்களைப் பற்றிய அறிமுகத்தை இரண்டு நிமிட வீடியோவாக படக்குழுவுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்தவகையில் இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் தாங்கள் நடித்த வீடியோக்களை அனுப்பினர் . வெளிப்படை தன்மைக்காக , அனைவருக்கும் கோட் நம்பர் கொடுக்கப்பட்டு , வெப் சைட் அனைவரது போட்டோக்களும் வெளியிடப்பட்டன. அவர்களில் இருந்து அடுத்தகட்ட தேர்வுக்கு தயாராகும் விதமாக 540 நபர்களை படக்குழு இறுதி செய்துள்ளது,

தங்களது விருப்பமான சூழ்நிலைகளை மையப்படுத்தி தங்களை பற்றிய சுய விபர வீடியோக்களை அனுப்பியிருக்கும் ஒவ்வொருவருக்கும்,, இப்போது ஒரே காட்சி கொடுக்கப்பட்டு அவர்கள் அதில் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்  தற்போது உக்ரைனில் நிலவும் போர் சூழல் குறித்து இந்த காட்சியின் மையக்கரு அமைந்திருக்கும். ஒரு பக்க காட்சியில் பலவேறு விதமான உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. சுசி கணேசனின் எதிர்பார்ப்பு என்ன என்பதும் , ஆர்வமிக்க நடிகர்கள் அவரது எதிர்பார்ப்பை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறார்கள் என்பதுமான இந்த ஆடிஷன் உண்மையிலேயே திரையுலகில் முதன்முறையான புது முயற்சி என்றே சொல்லலாம்.

 

Director Susi.Ganesan NewsFeatured
Comments (0)
Add Comment