இயக்குநர் வம்சி- ரவி தேஜா கூட்டணியின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ப்ரீ லுக் வெளியானது!

சென்னை.

தெலுங்கு சினிமாவின் ’மாஸ் மஹாராஜா’ ரவி தேஜா, செம ஹிட்கள் அடித்த இயக்குநர்  வம்சி கூட்டணியில் , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பான் இந்தியன் படமான  ’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின்  ப்ரீ-லுக் இன்று வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட,, அதே சமயம் வணிக ரீதியாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் இக்கூட்டணியின் மிக பிரம்மாண்டமான இப்படத்தை பெரும்பொருட்செலவில் தயாரிக்கிறது..

டோலிவுட்டின் மிக விஷேசமான பண்டிகையான உகாதியை  முன்னிட்டு இப்பபடத்தின் ப்ரீ லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் தேஜ் நாராயண் அகர்வால் வெளியிட்டார், பின்னால் அதிவேகமாக ரயில் வந்துகொண்டிருக்க…உயிரை துச்சமாக மதித்து கையில் சாட்டையுடன் ரவி தேஜா நின்று கொண்டிருக்கும் காட்சி உள்ளபடியே பிரமிப்பை உண்டாக்குகிறது.  ரவி தேஜா சட்டையின்றி நின்று தனது கம்பீரமான உடலைக் காட்டிக்கொண்டு  நிற்பது அவர் ஏதோ அதிரடியான ஆக்‌ஷனில் இறங்கக் காத்திருக்கிறார் என்று கட்டியம் கூறுகிறது.

ஜிவி பிரகாஷ் குமாரின் அற்புதமான பின்னணி இசையுடன் மோஷன் போஸ்டரும் வெகுஜனத்தை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. இந்த மோஷன் போஸ்டரின் காட்சிகள் உயர்தரம். ரவி தேஜாவின் உடல் மொழி, வசனம் மற்றும் கெட்அப் ஆகியவை ,முன்னெப்போதும் செய்யாத  முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்துக்கு அவர் தயாராகியிருப்பதை உறுதி செய்கின்றன. . இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர்  நடிக்கின்றனர்.

’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் பிரமாண்டமான வெளியீட்டு விழா இன்று மாதப்பூர், எச்ஐசிசியில் உள்ள நோவடெல்லில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவு செய்கிறார், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளர். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

நடிகர்கள்:

ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்
எழுத்தாளர், இயக்குனர்: வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
நிறுவனம் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால்
இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா
வசனங்கள்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
DOP: ஆர் மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
PRO: யுவராஜ்

Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger Nageswara Rao Pre-Look DroppedFeaturedRavi TejaVamsee
Comments (0)
Add Comment