இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா, தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும், புதிய இருமொழி திரைப்படம் அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் புதிய அலை சினிமாவுக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் வெங்கட் பிரவும் ஒருவர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவருடைய ஒவ்வொரு படத்திலும், அவர் மேற்கொண்ட சோதனை முயற்சிகள், புதிதாக வரும் இயக்குனர்களுக்கு பெரும் நம்பிக்கையாக விளங்குகிறது. மங்காத்தா என்ற பெரும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு, தற்போது மாநாடு என்ற பெரும் வெற்றியுடன் வந்துள்ளார். மாநாடு திரைப்படதின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடும் வேளையில், மன்மதலீலை என்ற படத்தோடு துரிதமாக வந்தார். குறுகிய காலகட்டத்தில் உருவான இந்த படம், அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் படமாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்குனராக அவதாரம் எடுத்து 15 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், நாகசைதன்யா உடன் அவர் இணையும் இருமொழி படத்தின் அறிவிப்போடு அவர் வந்திருக்கிறார்.
நாகசைதன்யா இந்த வருடத்தில் பங்கார ராஜு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, “ Thank you” என்ற அவரது அடுத்த படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் வேளையில், அவர் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இது வெங்கட் பிரபுவின் 11 வது படம், தெலுங்கில் அவருக்கு முதல் படம்.
டோலிவுட்டில் தொடர்ந்து படங்களை எடுத்து வரும் தயாரிப்பு நிறுவனம் Srinivasaa Silver Screens, தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளது. அதில் ராம் பொதினேனி உடைய “ தி வாரியர்”, போயபட்டி ஸ்ரீனு-ராம் இணையும் படத்துடன் தற்போது வெங்கட் பிரபு – நாக சைதன்யா இணையும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தினை தயாரிக்க, பவன் குமார் இப்படத்தினை வழங்குகிறார்.
பெயரிடப்படாத இந்த புதிய படம் நாகசைதன்யாவிற்கு முதல் தமிழ் படம் ஆகும், இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம், இப்படம் பெரிய பட்ஜெட்டில் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாசைதன்யாவின் திறமைக்கு தகுந்தபடியும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் இக்கதையை உருவாக்கியுள்ளார். முக்கியமான நடிகர்களும், பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களும் சேர்ந்து ஒரு கமர்சியல் எண்டர்டெயினராக, இப்படம் உருவாக்கப்படவுள்ளது.
பிரபலமான நடிகர், பிளாக்பஸ்டர் இயக்குனர் மற்றும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம் என அனைவரும் இணைந்து, ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு சிறந்த அனுபவத்தை தரவுள்ளனர்.படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
தொழில்நுட்ப குழு:
இயக்குனர்: வெங்கட் பிரபு
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்துரி
நிறுவனம்: Srinivasaa Silver Screens
வெளியீடு: பவன் குமார்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா மற்றும் ரேகா
டிஜிட்டல் மீடியா : விஷ்ணு தேஜ் புட்டா